புதுச்சேரி: தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 54). இவருக்கு மனைவி 3 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளை கல்பாக்கம் பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அறிவழகன் அவரது மனைவி மற்றும் இளைய மகள் ஆகிய 3 பேரும் மூத்த மகளை பார்க்க சென்று விட்டனர். மற்றொரு மகளான பவித்ரா (வயது 22) வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு வீட்டுக்குள் வரும்போது 2 நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.


பின்னர் அந்தப் பெண்ணை கையும் காலும் கட்டி வாயில் துணியை வைத்து அழுத்தி கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த செயினை பறித்த போது அது கவரிங் நகை என்று தெரிந்தவுடன் அதை போட்டு விட்டனர். பின்னர் வீடு முழுக்க நகை, பணம் ஏதாவது வைத்து இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் நகை, பணம் ஏதும் இல்லை. இந்நிலையில் திடீரென பவித்ராவுக்கு போன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த பவித்ரா சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது பவித்ரா கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.


பின்னர் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.  வீடுகளுக்கு மத்தியில் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டில் பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.