பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான முதல் படம் 'சீதா ராமம்'. தொலைக்காட்சி மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய மிருணாள் தாகூர் ஒரே படம் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றார். தென்னிந்திய ரசிகர்கள் சீதா மகாலக்ஷ்மி எனக் கொண்டாடும் அளவிற்கு பிரபலமானார். சீதா மகாலக்ஷ்மி என்ற மிகவும் மென்மையான கதாபாத்திரத்தில் ரசிகர்களை காந்தம் போல கவர்ந்து இழுத்துவிட்டார். 


 



சீதா மகாலக்ஷ்மியாக மாறிய மிருணாள் தாகூர்  :


இந்த நிலைக்கு அவர் வருவதற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. எந்த ஒரு சிபாரிசோ அல்லது பின்புலமும் இல்லாமல் பல போட்டிகளுக்கு நடுவே தனது கடின உழைப்பால் முன்னேறிய மிருணாள் தாகூர், சூப்பர் 30, லவ் சோனியா போன்ற சில இந்தி படங்கள் மூலம் தனது திறமையை நிரூபித்தார்.


தெலுங்கில் உருவான 'சீதா ராமம்' திரைப்படத்தில் இளவரசி நூர்ஜஹான் எனப்படும் சீதா மகாலக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்தது மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தனது அழகாலும் நடிப்பாலும் கவர்ந்த மிருணாள் தாகூர், 'சீதா ராமம்' ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். 


 






 


அளவு கடந்த அன்பு :


மிருணாள் தாகூர் வெளியிட்டுள்ள போஸ்டில் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். "என் மீது ரசிகர்கள் கனவையும் மீறிய அளவு அன்பைப் பொழிந்தனர். தெலுங்கில் எனது அறிமுகப் படத்திலேயே என்னை அவர்கள் வீட்டு பெண்ணாக ஏற்றுக்கொண்டார்கள். இந்த மறக்க முடியாத பயணத்துக்கு நன்றி. இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் உங்களை மகிழ்விப்பேன் என்று உறுதியளிக்கிறேன் அதற்காக காத்திருங்கள்" என்ற குறிப்போடு 'சீதா ராமம்' படத்தில் அவரது இனிமையான பயணம் பற்றின அழகான வீடியோவையும் பகிந்துள்ளார்.  


மிருணாள் தாகூரின் இந்த போஸ்டுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் லைக்ஸ்களையும் குவித்துள்ளனர்.  தற்போது மிருணாள் தாகூர் மிகவும் பிஸியான ஷெட்யூலில் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் அவரை தமிழ் படங்களில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் தமிழ் திரை ரசிகர்கள்.  


மேலும் படிக்க: 1 Year of Sita Ramam: மதம் கடந்து கடிதத்தில் இணைந்த மனங்கள்.. காஷ்மீரில் க்யூட் காதல்... ‘சீதா ராமம்’ வெளியாகி ஒரு வருஷம் ஆச்சு!