Muthu Re-release: ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான முத்து திரைப்படம் டிசம்பர் ரீ-ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 


ரஜினியின் ஐம்பது ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் அவர் நடித்த தளபதி, சிவாஜி, அருணாச்சாலம், அண்மையில் வெளிவந்த ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் என்றென்றும் ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் படங்கள் வரிசையில் உள்ளது. இதில் 1995ஆம் ஆண்டு திரைக்கு வந்து மெகா ஹிட் கொடுத்த முத்து படம் இன்று அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வெளியானது. தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளப் படத்தின்  ஒன்-லைனை வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் முத்து. இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். 


இதில் ரஜினியுடன் இணைந்து மீனா, சரத்பாபு, ராதா ரவி, ஜெயபாரதி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தில் ஜமீன்தாராராக சரத்பாபுவும் அவருக்கு வேலை செய்யும் கேரக்டரில் ரஜினியும் நடித்திருப்பார்கள். மீனா மேடை நாடகக் கலைஞராக நடித்திருப்பார். நகைச்சுவை, ஆக்‌ஷன், பாடல், ஃபிளாஷ்பேக் உள்ளிட்ட அனைத்தும் கொண்ட முத்து படம் ரசிகர்களின் என்றைக்குமான பேவரைட் மூவியாக உள்ளது. முத்து படத்திற்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல்,  ஜப்பானிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.


 வரும் டிச.12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பிறந்தநாள் பரிசாக இந்தப் படம் வெளியானது. முத்து படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சென்னை ரோகிணி திரையரங்கில் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகை மீனா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர். படம் முடிந்த பின்னர் படத்தின் இயக்குர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், இந்த படத்திற்கான வரவேற்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து படையப்பா படம்தான் ரீ-ரிலீஸ் செய்யப்படும் எனக் கூறினார். 


அதன் பின்னர் பேசிய நடிகை மீனா, “ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மழையில் கூட நீங்கள் படம் பார்க்க வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தினை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இவ்வளவு கொண்டாட்டத்துடன் பார்ப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. (இவ்வாறு மீனா கூறும்போது ரசிகர் ஒருவர், ”அதுதான் தலைவர்” எனக் கூறினார். அதற்கு உடனே மீனாவும் ”அதுதான் தலைவர்” எனக் கூறினார். அதற்கு உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.)