தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகன் பாத்திரம் மட்டுமின்றி பல வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் அதிகாலையிலேயே திரையரங்குகள் சென்று படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்து பதிவிட்டுள்ளனர்.
kathuvakula rendu kadhal Public Review | காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்படி இருக்கு?