அடுத்தடுத்த தோல்வியில் ஷங்கர்
ஜெண்டில்மேன் படம் தொடங்கி காதலன் , முதல்வன் , இந்தியன் , ஜீன்ஸ் , அந்நியன் , எந்திரன் என பல மெக ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷங்கர். காட்சி உருவாக்கத்தில் பிரம்மாண்டம் , அதிநவீன தொழில்நுட்ப பயண்பாடு என ஷங்கர் படங்களுக்கு என ஒரு தனித்துவம் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இரு படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளன.
கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொங்லை முன்னிட்டு வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர் படமும் படுதோல்வி அடைந்தது. ஒரு காலத்தில் ரசிகர்கள் வியந்து பார்த்த இயக்குநரா இன்று இப்படி மொக்கையாகிவிட்டார் என்கிற அளவிற்கு இந்த இரு படங்களும் சுமாரான விமர்சனங்களையே பெற்றன. அதே பிரம்மாண்டம் இந்த படங்களில் இருந்தன என்றாலும் திரைக்கதை ரீதியாக ஷங்கர் தன்னை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்கிற கருத்து பலரால் முன்வைக்கப்படுகிறது.
கேம் சேஞ்சர் படம் பற்றி எடிட்டர் ஷமீர் முகமத்
முன்னதாக கேம் சேஞ்சர் பட பாடல்கள் ஹிட் ஆகாதது குறித்து இசையமைப்பாளர் தமன் ஷங்கரை குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் படத்தொகுப்பாளர் ஷமீர் முகமத் படம் பற்றிய தன் விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். ஷங்கருடன் பணியாற்றியது ஒரு மோசமான அனுபவமாக இருந்ததாக அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேம் சேஞ்சர் படத்தை நான் எடிட் செய்யத் தொடங்கியபோது மொத்தம் 7.5 மணி நேரத்திற்கு காட்சிகள் இருந்தன. அதை எல்லாம் சுருக்கி 3 மணி நேரத்திற்கு படத்தை எடிட் செய்தேன்." என ஷமீர் முகமத் தெரிவித்துள்ளார்