’நாகின் சீரியல் மூலம் பிரபலமானவர் இந்தி நடிகர் மௌனி ராய். இவர் தனது நீண்டநாள் பாய்பிரண்டான சுராஜ் நம்பியாரை வருகின்ற 27 ஜனவரி அன்று திருமணம் செய்யவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துபாயில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோவாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே மௌனி ராயின் நண்பர்கள் கோவாவில் முகாமிடத் தொடங்கிவிட்டனர். ஏக்தா கபூர், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மௌனிராயின் பாய் பிரண்ட் சுராஜ் நம்பியார் துபாயை சேர்ந்தவர் என்றாலும் அவர் திருமணத்தையொட்டி முன்னரே இந்தியாவில் முகாமிட்டுள்ளார். மௌனிராய் அலியா பட் மற்றும் ரன்பீருடன் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்துள்ளார்.