சன் டிவியில் ஒளிபரப்பான நாகினி தொடர் மூலம் சிவன்யா எனும் கதாபாத்திரம் மூலம் நம் அனைவருக்கும் மிகவும் பிரபலமான நடிகை மௌனி ராய். தற்போது மௌனி ராய் அவரது கணவர் சூரஜ் நம்பியாருடன் FIFA வேர்ல்ட் கப் 2022 செமி பைனல்ஸ் பார்க்க தோஹாவில் உள்ளனர்.
அர்ஜென்டினா சப்போர்ட்டராக மௌனி ராய் :
அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்து FIFA வேர்ல்ட் கப் 2022 அரையிறுதி போட்டி தோஹாவில் நடைபெற்றது. லியோனல் மெஸ்ஸி அணி பெனாலிட்டி மேட்சில் வெற்றி பெற அரையிறுதிக்கு தகுதி பெற்று குரோஷியாவை எதிர்கொள்ள உள்ளனர். டிசம்பர் 20, 2022 வரை மரடோனா கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்த ஜோடி அங்கு சென்றுள்ளனர். மௌனி ராய் மற்றும் அவரின் கணவர் அர்ஜென்டினாவின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாமோஸ் இன்ஸ்டா போஸ்ட் :
அர்ஜென்டினாவை உற்சாகப்படுத்துவதற்காக மௌனி ராய் தேஹாவிற்கு சென்றதை தனது இன்ஸ்டா போஸ்ட் மூலம் பகிர்ந்துள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் நேரடியாக பார்க்கும் பாக்கியம் பெற்ற நீங்கள் மிகவும் லக்கி என கமெண்ட் செய்துள்ளனர். அவர் அங்கு விசிட்டர்ஸ் லாஞ்ஞில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அவர் இந்த போஸ்டிற்கு வாமோஸ் என குறிப்பிட்டு இருந்தார். வாமோஸ் என்றால் லெட்ஸ் கோ என அர்த்தம்.