இந்த படத்தை தயாரிப்பாளர் முரளி ராமசாமி தயாரித்து வருகிறார். ஏற்கனவே ஒரு சில படங்களை தயாரித்துள்ள முரளி ராமசாமி மறைந்த முன்னாள் மூத்த இயக்குனர் ராமநாராயணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராமநாராயணன் விலங்குகளை வைத்து படம் எடுப்பதில் மிகவும் பிரபலமானவர் 1980-களில் பல திரைப்படங்களில் விலங்குகளைக் கொண்டு காட்சிகளை அமைத்துள்ளார். இயக்குநர் ராமநாராயணன் படத்தின் ஸ்பெஷாலிட்டி அதுவென்றால் மிகையல்ல. 1981ம் ஆண்டு 'சுமை' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ராம நாராயணன் இயக்குநராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இறுதியாக அவர் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் 'ஆர்யா சூர்யா', தற்போது தந்தையின் வழியில் மகனும் விலங்குகளை வைத்து திரைப்படம் எடுக்கும் அந்த பாணியை இந்திய சினிமாவில் அமல் படுத்தி உள்ளார். ஆனால் இம்முறை விலங்கு கிராபிக் வடிவில் களமிறங்குகிறது. தற்போது அவருடைய தயாரிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கபி. புதுமுக இயக்குநராக கோகுல்ராஜ் பாஸ்கர் இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான VFX பணிகளையும் அவரே மேற்கொள்கிறார், மேலும் இந்த படத்திற்கான கிராபிக்ஸ் போர்ஷன்களை இயக்குநர் ஏற்கனவே 30 நாட்கள் இடைவெளியில் எடுத்து முடித்துவிட்டார் என்று தயாரிப்பாளர் முரளி கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கோகுல்ராஜ் பாஸ்கர் மற்றும் கௌசிக் இந்த படத்திற்கான கதை ,திரைக்கதை ஆகியவற்றை எழுத, இந்த திரைப்படம் ராமாயணத்தில் வரும் ஹனுமான் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கொரோனா காலகட்டம் முடிந்தது இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.