இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிறந்தது முதல் நமக்கு எத்தனை வயது ஆனாலும் நம் அம்மாக்கு இன்னும் நாம் சிறு பிள்ளைதான். நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நம் முகத்தை பார்த்தே என்ன ஆச்சு உனக்கு என்று கேட்கும் ஒரே தெய்வம் அம்மாக்கள்தான். 


இதனால்தான் சீரியலில் இருந்து திரைப்படங்கள் வரை அம்மா செண்டிமெண்ட் படம் என்றால் அதிரிபுதிரி ஹிட் அடிக்கும். அதிலும் திடைப்படங்களில் வரும் அம்மாக்கள் தொடர்பான பாடல்கள் அனைத்தும் நம் போனில் நீங்கா இடம் பிடித்திருக்கும். இப்படியான சூழ்நிலையில் அன்னையர் தினமான இன்று திரைப்படங்களில் ஹிட் அடித்த அம்மாக்கள் தொடர்பான 5 சிறந்த பாடல்களை இங்கே பார்க்கலாம்.


நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன் போல் ஆகிடுமா..? 


பிச்சைக்காரன் படத்தில் வரும் ”நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன் போல் ஆகிடுமா..?” பாடல் சமீப காலத்தில் அதிகமுறை கேட்கப்பட்ட அம்மா பாடல்களில் ஒன்று. இந்த பாடல் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் நின்று பேசும். 



தாலாட்டு பாடும் சாமி: 


அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டைரி. இந்த படத்தில் கிளைமேக்ஸில் வரும் தாலாட்டு பாடும் சாமி பாடல் ஹெட்போனில் போட்டு கேட்டால் உங்களை அறியாமல் கண் கலங்கும். இந்த பாடல் மிகவும் கவனிக்கபடாத அம்மா பாடல்களில் ஒன்று. முடிந்தால் ஒருமுறை கேட்டுபார்த்துவிட்டு உங்களது ரிவ்யூ சொல்லுங்கள்..



கண்கள் நீயே: 


அதர்வா நடிப்பில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்கள் நீயே பாடல் ஒன்றுபோதும், ஒவ்வொரு தாயும் தனது பிள்ளைகளில் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் தருணத்தை வெளிக்காட்ட.. ஜி.வி.பிரகாஷ் மிக நேர்த்தியாக இந்த பாடலை செதுக்கியிருப்பார். ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல் இது.



அம்மா அம்மா:


வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்றிருந்த அம்மா அம்மா பாடல். அனைவரும் நிச்சயம் இந்த பாடல் பிடிக்கும். மிகவும் எளிய பாடல் வரிகளுடன் சிறப்பாக இசை அமைத்திருப்பார் அனிருத். அம்மா தொடர்பான பாடல்களில் இந்த பாடலும் டாப் டக்கர்தான்.



ஆராரிராரோ நான் இங்கு பாட:


நடிகர் ஜீவா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த ராம் படத்தில் இடம்பெற்றிருந்த ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு பாடல். எப்பா! என்னா பாடல் இது என்பது நம் மனதை மிகவும் உருக்க செய்யும். டைம் இருந்தா நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்க..