நாள்: 12.05.2024 


கிழமை: ஞாயிறு


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


குளிகை:


மாலை 3.0 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 12.0 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


ரிஷபம்


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கேட்ட சில உதவிகள் சாதகமாக அமையும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். ஆசை நிறைந்த நாள்.


மிதுனம்


மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சூல்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செயல்படவும். வாடிக்கையாளர்கள் இடத்தில் அமைதி காக்கவும். உடலில் ஒருவிதமான அசதியும், மனசோர்வும் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.


கடகம்


எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


சிம்மம்


தவறிய சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.


கன்னி


பழைய அனுபவங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். இரக்கம் வேண்டிய நாள்.


துலாம்


எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். சில பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். துணைவர் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தடைபட்ட சில பணிகள் முடிவடையும். சுப காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சுகம் நிறைந்த நாள்.


விருச்சிகம்:


வெறுமையான பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். அலுவலகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


தனுசு


திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சக பணியாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.


மகரம்


பேச்சுக்களுக்கு மதிப்பு கூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்களால் ஆதாயம் அடைவீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். கடன் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.


கும்பம்


குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். இலக்கியப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமை வேண்டும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


மீனம்


தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு வெற்றிக்கு வழிவகுக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். கல்வி பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் மறையும். நன்மை நிறைந்த நாள்.