தமிழ் திரையுலகில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்றுள்ள படங்களின் எண்ணிக்கையில், விஜய் முதலிடத்தில் உள்ளார்.
சோசியல் மீடியா வார்:
தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்களின் ரசிகர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருவது என்பது பல காலங்களாகவே நிலவுவது. திரையரங்க வளாகங்களில் சண்டையிடுவது தொடங்கி, யார் படங்கள் அதிகம் வசூல் செய்து வருகிறது என்பது வரை மோதிக்கொண்ட காலங்கள் எல்லாம் மலையேறி விட்டது. இன்றைய தேதியில் ரசிகர்களின் மோதல் எல்லாம் சமூக வலைதளங்களில் தான் நிகழ்ந்து வருகிறது. எந்த நடிகரின் படங்களின் டீசர், டிரெய்லர் அதிக வியூஸ், லைக்ஸ் பெறுகிறது. யாருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகளவில் ஷேர் மற்றும் ரி-டிவீட் செய்யப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு தான் சமூகவலைதளங்களில் பெரும் போரே நடந்து வருகிறது.
யாருக்கு அதிக பலம்?
எந்த நடிகருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது கூட இந்த லைக், ஷேர், வியூஸ் மற்றும் ரிடிவீட்டை கொண்டு தான் கணிக்கப்படுகின்றன. இதற்காகவே 24 மணி நேரத்தில் யாருடைய டீசர் மற்றும் டிரெய்லர்கள் அதிக வியூஸ் பெறுகின்றன என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பெரும்பாலான நேரங்களில் விஜயின் படங்கள் புதுப்புது சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், அவரது சாதனையை தனுஷின் கேப்டன் மில்லர் படம் தகர்த்து முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து, தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ் பெற்ற டீசர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
01. கேப்டன் மில்லர்:
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 2.31 கோடி வியூஸ்களை பெற்றுள்ளது. இதன் மூலம், தமிழ் சினிமாவில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக வியூஸ் பெற்ற டீசராக கேப்டன் மில்லர் படத்தின் டீசர் உருவாகியுள்ளது. இதன் மூலம், இந்த சாதனையில் முதலிடத்தில் இருந்த விஜயை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
02. மாஸ்டர்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தின் டிசர், வெளியான 24 மணி நேரத்தில் 2 கோடி வியூஸ்களை பெற்றது. இந்த சாதனையை தான் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் டிசர் முறியடித்துள்ளது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற டீசரின் பட்டியலில், 1.49 கோடி வியூஸ்களுடன் விஜயின் சர்கார் மூன்றாவது இடத்திலும், 1.12 கோடி வியூஸ்களுடன் விஜயின் மெர்சல் நான்காவது இடத்திலும், 94 லட்சம் வியூஸ்களுடன் ரஜினியின் 2.0 ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
சாதனை படைக்குமா லியோ?
இந்நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சாதனையை தகர்த்து, அதிக வியூஸ் பெற்ற டீசர் என்ற சாதனையை விஜயின் லியோ படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடயே, 24 மணி நேரத்தில் அதிக வியூஸ் பெற்ற தமிழ் திரையுலகின் டிரெய்லர் பட்டியலில், விஜயின் பீஸ்ட் திரைப்பட டிரெய்லர் சுமார் 3 கோடி வியூஸ்களுடன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.