லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய ஒரே நாளில்  3.1 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது . இந்நிலையில் யூடியூபில் ஒரே நாளில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற தென் இந்தியப் படங்களில் ட்ரெய்லர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் தான் இந்த வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய ஒரே நாளில் 31.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது மேலும் ஒரே நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்ரெய்லர் லியோ. மொத்தம் 2.64 மில்லியன் லைக்குகளை லியோ ட்ரெய்லர் பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது லியோ திரைப்படம்.


பீஸ்ட்


இந்த வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதும் விஜயின் படம்தான். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் கொண்டாடிய ட்ரெய்லர்களில் ஒன்று. வெளியான ஒரே நாளில் மொத்தம் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர். அதே நேரத்தில் ஒரே நாளில் 2. 22 மில்லியன் லைக்குகளைப் பெற்றது பீஸ்ட் ட்ரெய்லர்


துணிவு


அஜித் குமார் நடித்து எச் வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான துணிவு படத்தின் ட்ரெய்லர் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.    வெளியான ஒரே நாளில் மொத்தம் 28 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது துணிவு படத்தின் ட்ரெய்லர்.






சர்கார் வாரி பாட்டா


கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் தென் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரெய்லர்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்த இந்தப் படத்தை பரசுராம் இயக்கினார். ஒரு நாளில் 22.77 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது சர்கார் வாரி பாட்டா படத்தின் ட்ரெய்லர்.


ராதே ஷியாம்


பிரபாஸ் பூஜா ஹெட்ஜே நடித்து கடந்த ஆண்டு வெளியான ராதே ஷியாம் திரைப்படம் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் 23.20 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.




மேலும் படிக்க : Leo Vijay: என்னது.. விஜய்க்கு ஓப்பனிங் சாங் இல்லையா.. பில்ட்-அப் இல்ல.. லியோ முழுக்க முழுக்க லோகேஷ் படம்!


Thalaivar 171: ஐமேக்ஸ் கேமராவில் ‘தலைவர் 171’ ஷூட்டிங்.. ரஜினிக்காக லோகேஷ் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான்!