இந்த ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய், அமீர் கான், அமிதாப்பச்சன் உள்ளிட்டோரை காஜல் அகர்வால், சமந்தா, ராஷ்மிகா ஆகியோர் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் ஜூன் 23ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கூகிளில் அதிகம் தேடப்பட்டவர்கள் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சேர்க்கப்படாமல் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலின் முதல் 100 இடங்களில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் நடிகைகளே அதிகம் இடம்பெற்றுள்ளனர். முதல் 20 இடங்களில் தமிழ் நடிகர்களே இல்லை.
முதல் பத்து இடங்களில் 3வது இடத்தில் சித்து மூஸ்வாலா, 5ம் இடத்தில் லதா மங்கேஷ்கர், 7வது இடத்தில் காத்ரினா கைஃப், 8வது இடத்தில் ஆலியா பட், 9வது இடத்தில் ப்ரியங்கா சோப்ரா ஆகியோரும் பத்தாவது இடத்தில் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளனர். நடிகர் விஜய் இந்த பட்டியலில் 22வது இடத்தைப் பிடித்துள்ளார். அதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடிகைகள் காஜல் அகர்வால் 15வது இடத்தையும், சமந்தா 18வது இடத்தையும், ராஷ்மிகா 20வது இடத்தையும் பிடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 19வது இடத்தில் உள்ளார்.
வி, ஜங்கூக், சித்து மூஸ் வாலா, ஜிமின், லதா மங்கேஷ்கர், லிஷா, காத்ரினா கைஃப், ஆலியா பட், ப்ரியங்கா சோப்ரா, விராட் கோலி, சல்மான் கான், ஷாருக் கான், சுகா, ஜென்னி, காஜல் அகர்வால், கரீனா கபூர், யுசுரு, சமந்தா, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, யு, விஜய், ஜின், ஜாக்கி சான், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், ஜிசூ, தீபிகா படுக்கோன், ரோஸ், கேகே,ரன்பீர் கபூர், எம்.எஸ்.தோனி, நயன்தாரா, ஜே-ஹோப், ஆர்எம், அமிதாப் பச்சன், தமன்னா, கஜோல், மாதுரி தீட்சித், யஷ், ஹ்ரித்திக் ரோஷன், அமீர் கான், ரோகித் ஷர்மா, பூஜா ஹெக்டே, ஷ்ரதா கபூர், ச யுன் வூ, மகேஷ் பாபு, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், லீ மின் ஹோ, அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளனர்.
தமிழ்நடிகர்களில் விஜய், தனுஷ், சூர்யா, ரஜினிகாந்த் ஆகிய 4 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் நடிகர் அஜித்தின் பெயர் இடம்பெறாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கிரிக்கெட்டர்களைப் பொறுத்தவரை, கோலி, தோனி, ரோகித் ஷர்மா, ராகுல், பாண்டியா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஆசிய அளவில் கூகிளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.