பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர தமிழகத்தில் ஜூன் 28 மாலை 6 மணி வரை 91,834 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதே நாளில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர முதல் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. கடந்த 8 நாட்களில் 91,834 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 50,427 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 24,322 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 1 லட்சம் மாணவரள் கூட விண்ணப்பிக்காத நிலையில், பொறியியல் மீதான ஆர்வம் குறைந்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வு: முழு பட்டியல்
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - ஜூலை 19, 2022.
சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நாட்கள் - 20.07.2022 முதல் 31.07.2022 வரை
தர வரிசைப் பட்டியல் வெளியீடு - 08.08.2022
சேவை மையம் வாயிலாகக் குறைகளை நிவர்த்தி செய்தல்- 09.08.2022 முதல் 14.08.2022
சிறப்புக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)
* மாற்றுத்திறனாளி
* முன்னாள் படை வீரர்
* விளையாட்டு
ஆகிய 3 பிரிவினருக்கும் 16.08.2022 முதல் 18.08.2022 வரை கலந்தாய்வு
பொதுக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)
* பொதுக்கல்வி
* தொழில்முறைக் கல்வி
* அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு
ஆகிய 3 பிரிவினருக்கும் 22.08.2022 முதல் 14.10.2022 வரை கலந்தாய்வு
துணைக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 15.10.2022 & 16.10.2022
எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 17.10.2022 & 18.10.2022
கலந்தாய்வு இறுதி நாள் - 18.10.2022.
இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர, https://tneaonline.org இணையதளத்தில் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
7 நாட்களுக்குள் முன்வைப்புத் தொகை
முதல்முறையாக இந்த முறை கலந்தாய்வு முடிந்து 7 நாட்களுக்குள் மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தொகையைச் செலுத்தாவிட்டால், 2ஆம் கட்ட முன்னுரிமை கோரியுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விடும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்