Valimai update : ’தல’ ஃபேன்ஸுக்கு ஒரு குட் நியூஸ்! வெளியான க்ளூ.. நாளைக்கு ரிலீஸாகிறதா வலிமை டீசர்?

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

பொதுவாக அஜித் படங்கள் என்றாலே ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் காத்திருப்பார்கள்.  அஜித் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் , சமூக வலைத்தளங்கள் போன்ற எதிலுமே நாட்டம் செலுத்தமாட்டார். லட்சக்கணக்கான ரசிகர்களால் ‘தல’ என அன்போடு கொண்டாடப்படும் அஜித்தின் முழுமையான தரிசணம் கிடைப்பது திரையில் மட்டும்தான்.அதனால்தானோ என்னவோ ரசிகர்கள் அஜித்தின் படங்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பிங்க் படத்தின் ரீமேக்காக வெளிவந்த நேர்க்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹச்.வினோத் நடிப்பில் மீண்டும் கூட்டணி அமைத்தார் அஜித். அந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் சமீபத்தில்தான் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி அதகளப்படுத்தினர். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 21) , வலிமை படத்தின் வில்லனும் தெலுங்கு நடிகருமான கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கார்த்திகேயாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த புகைப்படம் வெளியானதை தொடர்ந்து வலிமை என்ற ஹேஷ்டேக் இணைய டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. 

Continues below advertisement


இந்நிலையில் நாளை (செப்டம்பர் 23 , வியாழக்கிழமை)  படத்தின் டீஸரை வெளியிட இருப்பதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் தெவிக்கின்றன. #ValimaiManiaStartsNow என்ற முன்னெடுப்பையும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு மாஸ் இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. முன்னதாக ‘வேற மாறி’ என்ற வரிக்காணொளி வெளியாகி இணையத்தை கலக்கியது. இந்நிலையில் டீஸர் வெளியாக உள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தின் அசைவுகளை திரையில் காண இருப்பதாலோ என்னவோ வலிமை படத்திற்கு , இந்த ஆண்டின் தொடக்கம் முதலே எக்கச்சக்க ஹைப். 



முன்னதாக படத்தை வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘ அண்ணாத்த’ படமும் அன்றே வெளியாக இருப்பதால் , அந்த ரேஸில் பங்கேற்க விருப்பமில்லாமல் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததாக தெரிகிறது. படத்தை இந்த ஆண்டிற்குள்ளாகவே வெளியிட வேண்டும் என்பதில் தீர்க்கமாகவுள்ள படக்குழு வருகிற டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு படத்தை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் உள்ளார்களாம். எது எப்படியோ நாளை டீஸர் வெளியானால் அதில் வெளியீட்டு தேதி விவரங்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் சிலர். வலிமை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கியுள்ளார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி  நடித்து வருகிறார்.  மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் .

Continues below advertisement
Sponsored Links by Taboola