தமிழ் திரையுலகின் பிரபல நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோவாக நடித்துள்ளார். அறம் படத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
மூக்குத்தி அம்மன்:
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகிய மூக்குத்தி அம்மன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் படம் முதன்முதலில் உருவானது எப்படி?
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் படம் எடுக்க வேண்டும் என்று ஆர்ஜே பாலாஜி ஒரு கதை சொன்னார். என் குடும்பத்தின் குல தெய்வம் மூக்குத்தி அம்மன். அதை அவர் சொன்ன உடனே அது எனக்கு ரொம்ப பிடிச்சு போயி, உடனே ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன்.
நயன்தாரா ஒரே சாய்ஸ்:
அப்போது, அம்மனாக நடிக்க யாரை கூப்பிடலாம் என்று கூப்பிட்டபோது, ஒன் அண்ட் ஒன்லி சாய்ஸ் நயன்தாரா. உடனே அவரை அணுகினோம். அவங்களும் ஒத்துகிட்டு மூக்குத்தி அம்மனாகவே அந்த படத்தில் வாழ்ந்தாங்க. அந்த படம் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துச்சு.
அந்த படம் 5 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்து ஏதாவது, அம்மன் படம் வரும் என்று நானும் எதிர்பார்த்து இருந்தேன். வருவது போல இல்லை. பான் இந்தியாவாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று கருதினேன். ஏன் நாம் மூக்குத்தி அம்மன் 2 பண்ணக்கூடாது? என்று நமது வேல்ஸ் நிறுவனத்திடம் கூறினேனன்.
சுந்தர் சி:
யாரை வைத்து இதை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும்போது, ஒன் அண்ட் ஒன்லி சுந்தர் சி தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அவரை ப்ரான்ஸைஸ் கிங் என்றே சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நயன்தாரா நாயகியாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பூஜை இன்று சென்னை வடபழனியில் நடந்தது. இந்த பூஜையை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இந்த படத்தில் குஷ்பூ, மீனா ஆகியோரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.