Monkey Man Trailer: நடிகை ஷோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மங்கி மேன்’  படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

 

“பொன்னியின் செல்வன்” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷோபிதா துலிபாலா. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர், அடுத்தடுத்து இந்தியில் சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த ஷோபிதா, பிரபலமாகத் தொடங்கினார். இந்தி, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் ஒரு படத்திலும், மூதோன் என்ற மலையாள படத்திலும் நடித்து தென்னிந்திய திரைத்துறைகளிலும் நடிக்க தொடங்கினார். 

 

இந்தி, தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வந்த ஷோபிதா, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த குரூப் என்ற படத்தில் நடித்து அசத்தினார். இந்தப் படம் ஷோபிதாவுக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. தொடர்ந்து இந்தியில் தி நைட் மேஜேனர், ”மேட் இன் ஹெவன்” என்ற வெப் தொடர்களில் நடித்து அதிகமாக பேசப்பட்டார். 

 

தி நைட் மேஜேனர் வெப் தொடரைத் தொடர்ந்து இந்தியில் சித்தாரா என்ற படத்தில் நடித்து வரும் ஷோபிதா ஹாலிவுட் பக்கமும் திரும்பியுள்ளார். ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட “மங்கி மேன்” என்ற படத்தில்  ஷோபிதா நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை ஷோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கும் “மங்கி மேன்”  படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஷோபிதா நடித்த முதல் படமான ’ராமன் ராகவ் 2.0’, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரை பெற்றார். அதேபோல் விமர்சனரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ மற்றும் தெலுங்கில் ‘கூடாச்சாரி’, ‘மேஜர்’ போன்ற வெற்றிப் படைப்புகளை வழங்கிய ஷோபிதா, தற்போது சர்வதேச அரங்கில் நுழைந்துள்ளார். 


ஆஸ்கார் விருது பெற்ற ஜோர்டான் பீலேவுடன் இணைந்து யுனிவர்சல் பிக்சர்ஸின் தயாரிக்கும் "மங்கி மேன்" என்ற த்ரில்லர் படத்தின் மூலம் ஷோபிதா ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். "விப்லாஷ்" போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றி, அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  சமீபத்தில் வெளியிடப்பட்ட "மங்கி மேன்" திரைப்படத்தின் ட்ரெய்லர் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவ் படேல் இயக்கத்தில், ஷோபிதா துலிபாலா நடிப்பில் தயாரான ‘மங்கி மேன்’ படம் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.