பலரும் எதிர்பார்க்கும் மணிஹெய்ஸ்ட் 5 வெளியாவதை தொடர்ந்து ஒரு தனியார் நிறுவனம் தங்களது  ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளித்துள்ளது.  அது தொடர்பான அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது


உலக அளவில் மக்கள் தற்போது படங்களில் கவனம் செலுத்தும் நேரத்தை விட வெப் சீரிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் உலக மக்கள் அனைவருக்கும் பிடித்தமான தொடர் மணி ஹெய்ஸ்ட். ஏற்கனவே நான்கு சீசன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மணிஹெய்ஸ்ட் 5வது தொடர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இதனால் கடுமையான விளம்பர வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது. இந்நிலையில் மணிஹெய்ஸ்டின் 5வது தொடரை காண ரசிகர்கள் வேற லெவல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.  




இந்நிலையில் மணிஹெய்ஸ்ட் பீவரில்  ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறையே அளித்துள்ளது. நெட்பிளிக்ஸ் அண்ட் சில் என்ற பெயரில் செப்டம்பர் 3ம் தேதி விடுமுறை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவையில்லாமல் அன்றைய தினம் யாரும் பொய்க்காரணங்களை கூறி விடுமுறை எடுப்பதை தவிர்க்கவே இந்த விடுமுறை என நகைச்சுவையாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.


புரபசர் தலைமையில் பணம் திருடுவது கதை. இதை கேட்டவர்கள் என்னது வெறும் பணத்தை திருடுவதற்காகவா இந்த தொடர் கொண்டாடப்பட்டு வருகிறது என கேட்கலாம் . இவர்கள் திருடும் இடம் சாதாரணமானது இல்லை, பணம் அச்சிடும் இடம். மிகவும் பாதுகாப்பு பொருந்திய கட்டங்களில் இவர்கள் எப்படி திருடுகிறார்கள் என்பதே கதையாகும். 




கடைசியாக வெளியான நான்காவது தொடரில், நைரோபி யாரும் எதிர்பார்க்காத நிலையில் உயிரிழந்தார். மிகவும் முக்கியமான கதாபாத்திரம் இறந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான்கு பகுதிகள் முடிந்த நிலையில், ஐந்தாவது பகுதி தற்போது வெளியாக உள்ளது. இது தொடர்பான புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. வழக்கம் போல் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகிறது. மேலும் அந்த டீஸரில் always fight never surrender என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இத்தொடர் வெளியாக உள்ளது.