ஃபிட்னஸ் ஃபிரீக் :



தமிழ், தெலுங்கு , இந்தி , ஹாலிவுட் என பன்மொழி சினிமாவில் பிஸியாக நடித்து வருவபர் நடிகை சமந்தா.  என்னதான் சமந்தா பிஸியாக நடித்தாலும் ஒருநாள் கூட உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை. சமீபத்தில் கூட அவர் கிளாமராக ஒரு புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். அவர் எந்த அளவிற்கு கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுடலாக மாற்றியிருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது. 







மண்டே மோட்டிவேஷன் :


இன்று திங்கள் கிழமை, தனது ரசிகர்களுக்கு பாசிட்டிவான ஒரு அணுகுமுறையை கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கறுப்பு அட்லீஷர்  ஒன்றை அணிந்து  கையில் ஒரு டம்ப்பெல்லுடன் தனது பைசெப்பைக் காட்டுகிறார் சமந்தா.



வரம்பே கிடையாது:


சமந்தா தனது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, தனது வரம்புகளை மீறி சாதிக்க வேண்டும் என நினைப்பவர். உடற்பயிற்சியில் மட்டும் விதிவிலக்கா என்னா? அவ்வபோது அவர் கடினமான உடற்பயிற்சிகள் செய்வதை பார்க்கும் பொழுது நிச்சயம் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் தோன்றும்!







படங்கள்:


சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தை சமீபத்தில் முடித்த சமந்தா சிட்டாடல், வ‌ருண் தவானுடன் இணைந்து  அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என்னும் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.