மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது டோவினோ தாமஸ். மாயநதி, மின்னல் முரளி, வைரஸ் மற்றும் மோகன் லால் உடன் லூசிபர் என ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்.
டோவினா தாமஸ்:
ஒரு நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ''பிரபுவின்டே மக்கள்'' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான டோவினோ தாமஸ் அதனை தொடர்ந்து காதல், காமெடி, ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். சிறப்பான நடிப்பு, வசீகரமான தோற்றம் என ஒரு நடிகருக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்ட டோவினோ தாமஸ் ஏராளமான ரசிகர்களை பெற்ற முன்னணி நடிகராக திகழ்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் டோவினோ தாமஸ் ஏராளமான வீடியோ மற்றும் புகைப்படங்களை போஸ்ட் செய்வது வழக்கம். அந்த வகையில் தனது படத்தின் போஸ்டர் மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட ஏராளமான புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். மேலும் டோவினோவிற்கு அட்வென்சர் செய்வதில் மிகவும் ஆர்வம் உடையவர். தனது செல்ல மகள் இஸ்ஸாவுடன் ஜிப் லைனில் ட்ராவல் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட்டாக போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோவில் ஜிம்பாவே ஆற்றின் நடுவே சாகச பயணம் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் த்ரில்லிங்காகவும் இருக்கிறது. அந்த வீடியோவிற்கு தனது மகள் பற்றின அழகான பதிவு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.
அட்வென்சர் பார்ட்னர்:
"என்னுடைய அட்வென்சர் பார்ட்னர் எனது மகள் இஸ்ஸா. என்னுடைய முதல் குழந்தை. அவளுடைய அன் கண்டிஷனல் லவ் தான் என்னுடைய உயிர் நாடி. இஸ்ஸா பிறக்கும் போது நான் தான் அவளை முதலில் பிடித்துக் கொள்வேன் என்று முடிவு செய்திருந்தேன். அவளுடைய பல முதல் அனுபவங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என எப்போதும் விரும்பினேன். அது போல ஒன்றை தான் நாங்கள் இப்போது அனுபவிக்கிறோம். எங்கள் முகம் முழுக்க புன்னகையுடன், காற்றில் தலைமுடியை பறக்கவிட்டு எங்கள் பயத்தை மறைக்கிறோம். மேலும் இது போன்ற பல அட்வென்சர் சாகசங்களை உன்னுடன் அனுபவிக்க காத்திருக்கிறேன் எனது பொக்கிஷமே.
டோவினோ தாமஸ் இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் ஏரளமான லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் குவித்து வைரலாக பரவி வருகிறது.