மோகன்லால் நடித்துள்ள துடரும் 

தருன் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் துடரும். 15 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தில் மோகனலால் ஷோபனா இணைந்து நடித்துள்ளார்கள். பிரகாஷ் வர்மா , தாமஸ் மேத்யு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மோகன்லால் நடித்து வெளியான மலைக்கோட்டை வாலிபன் , பரோஸ் , எம்புரான் என அடுத்தடுத்து மூன்று படங்கள் தோல்வியை சந்தித்தன. இப்படியான நிலையில் பெரியளவில் ப்ரோமோஷன் எதுவும் இல்லாமல் திரையரங்கில் வெளியாகியுள்ள துடரும் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்

துடரும் பட விமர்சனம்

அடுத்தடுத்து மூன்று தோல்விகளுக்குப் பின் மோகன்லால் ஒரு சூப்பரான கதையுடன் கம்பேக் கொடுத்திருக்கிறார். த்ரிஷ்யம் படத்தைப் போலவே குடும்பத்தை மையப்படுத்திய கதை துடரும் . முதல் 20 நிமிடம் கொஞ்சம் நிதானமாக சென்றாலும் அடுத்து படம் வேகமெடுக்கிறது. எந்த வித தொய்வும் இல்லாமல் பயங்கர சுவாரஸ்யமாக செல்கிறது" ஒருவர் கூறியுள்ளார்