ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ரெட்ரோ

கங்குவா படத்தின் தோல்விக்கப் பின் சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை வைத்து காத்திருக்கும் திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யா , பூஜா ஹெக்டே , கருணாகரன் , ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ரொமாண்டி த்ரில்லர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கேம்ங்ஸ்டர் கதைகளை மையமாக எடுத்துவந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக காதல் கதையை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை முதலில் ரஜினிகாந்திற்காக எழுதியதாகவும் பின் சூர்யாவுக்கு ஏற்ற வகையில் கதையை மாற்றியமைத்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.  ரெட்ரோ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. அந்தமான் தீவுகள் , நீலகிரி மலைகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. 

அமெரிக்காவில் தொடங்கிய முன்பதிவு

இந்தியா மட்டுமில்லமல் அமெரிக்காவிலும் ரெட்ரோ படம் வெளியாக இருக்கிறது. அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. நேற்று ஏப்ரல் 24 ஆம் தேதி  ரெட்ரோ படத்தின் முன்பதிவுகள் தொடங்கின. ஒரே நாளில் 3200க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் முன்பதிவில் விற்பனையாகியுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு கூடுதல் வரவேற்பு இருக்கும் என எதிரபார்க்கப்படுகிறது. சூர்யாவின் முந்தைய படமான கங்குவா திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ரெட்ரோ படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெறும் பட்சத்தில் படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிபெறும் என எதிர்பார்க்கலாம்.