2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாள திரைப்படமான லூசிபர், மோகன்லால் நடிப்பில் , பிருத்விராஜ் சுகுமாரன் இப்படத்தை இயக்கியிருந்தார். மலையாள படமான லூசிஃபரின் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய வேடத்தில் நடிக்க நயன்தாரா இறுதி செய்யப்பட்டிருந்தார். இந்த திரைப்படத்தை ‛ஜெயம்’ ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.  மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மலையாளத்தில் மோகன்லால் ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் இதற்கு முன்னர் 1997 இன் ஹிட்லரில் சிரஞ்சீவியுடன் பணிபுரிந்ததால் ராஜாவிற்கு இந்த வாய்ப்பு தரப்பட்டதாக கூறப்பட்டது. 




கடந்த  ஜனவரி மாதம்  லூசிஃபர் திரைப்படம் பூஜை போட்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது.  என்.வி.பிரசாத் மற்றும் கொனிடெலா புரொடக்ஷன்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்படும் இப்படத்தில் டோவினோ தாமஸின் பாத்திரத்தை சத்ய தேவ் காஞ்சரனா நடிக்கவிருக்கிறார்  என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிப்ரவரி 2021ல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்  என பலரும் எண்ணி இருந்தனர் .




இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜாவிடம் சிரஞ்சீவி மலையாளத்தில் உள்ள கதைகளில் சிறுது மாற்றங்களை செய்து மீண்டும் தன்னை சந்திக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் கதையில்  மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்காததால், படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என்று மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வருகிறாராம் சிரஞ்சீவி. இதனால் மோகன்ராஜா இந்தப்படத்தில் இயக்குனராக நீடிப்பாரா  என்கிற சந்தேகம் எழுந்துள்ளது . இன்னும் இந்தப் படத்திற்கான எந்த விதமான வேலைகளும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் யார் இந்தப் படத்தை இயக்கப்போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது .