மோகன் ஜி


பழைய வண்ணாரபேட்டை , திரெளபதி , பகாசூரன் ஆகிய படங்களை இயக்கி தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குநர் மோகன் ஜி. ஒருபக்கம் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் கருத்துக்களை பேசினார். அவர்களுக்கு எதிராக தனது படங்களில் இவர்களுக்கு எதிர் அரசியல் பேசுவதையே தனது நோக்கமாக வைத்துள்ளார் மோகன் ஜி. 


திரெளபதி 2


ஒவ்வொரு பெரிய படம் வரும்போதும் நானும் வடசென்னையை வைத்து நார்கோஸ் மாதிரி படம் எடுப்பேன் அது இது என பில்டப் கொடுத்து வந்த மோகன் ஜி தற்போது களத்தில் இறங்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் தற்போது தனது அடுத்த படமாக திரெளபதி 2 படத்தின்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி.  திரெளபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். 14 ஆம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசளர்களின் செந்நீர் சரிதம் என இந்த போஸ்டரில் குறிப்பிடப் பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் வெளியாகி பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது தானும் ஒரு வரலாற்று திரைப்படத்தை கையில் எடுத்துள்ளார் மோகன் ஜி.