ஆடுகளம் படத்தின்  மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பன் மொழிகளில் முன்னணி நாயகியாக உள்ளார். இவர் சமீபத்தில் கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட ஹாரர் மூவிகளில் நடித்திருந்தார். அதுபோக இந்தியில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த தப்பட், பிங்க் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பயோப்பிக்கில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்த மிதாலி ராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் டாப்ஸி.


மிதாலி ராஜ்


சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.






ரன் மெஷின்


12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868 ரன்கள் எடுத்துள்ளார் அவர். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 2017 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் மிதாலி. மொத்தம் 7805 ரன்கள் குவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


ஓய்வு அறிவிப்பு


இதே ஜூன் மாதத்தில் கடந்த 1999 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுக வீராங்கனையாக களம் கண்டார் மிதாலி. அப்போது அவருக்கு 16 வயது. அன்று முதல் இந்திய அணிக்காக மும்முரமாக ரன் குவித்து வந்தார். சீனியர் வீராங்கனையாக அணியை திறம்பட வழிநடத்தி வந்தார். இப்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.






டாப்ஸி இன்ஸ்டாகிராம் பதிவு


மிதாலியின் பயோப்பிக்கில் நடித்து வரும் டாப்ஸி அவருக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்தை தெரிவித்து உள்ளார். "சிலருடைய சாதனைகள் பாலினம் தாண்டி நிற்கும், நீங்கள் ஆட்டத்தை மாற்றிவிட்டீர்கள்; தற்போது அதன் மீதான பார்வையை மாற்றுவதற்கான நேரம்" என்று எழுதிய அவர் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு இருந்தார். அவை, 



  • இந்திய கிரிக்கெட் அணியின் மிக இளமையான கேப்டன்

  • நான்கு உலகக்கோப்பைகளில் கேப்டனாக செயல்பட்டு, இரண்டு முறை ஃபைனல் சென்ற ஒரே இந்திய வீரர்.

  • டெஸ்ட் போட்டியில் 200 ரன் அடித்த இளமையான வீரர்.

  • அறிமுகப்போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்.

  • 7 தொடர் அரைசதம் அடித்த ஒரே இந்தியர்.

  • 23 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியவர்.






சபாஷ் மித்து


இந்தி மொழியில் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் சபாஷ் மித்து படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். வயாகாம்18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. மிதாலி ராஜின் 8 வயது முதல், குழந்தையாக கிரிக்கெட் கனவுடன் இருக்கும் பயணத்தை இந்த படம் காட்டுவதாக கூறியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.