நடிகை மிருணாளினி ரவி, பெங்களூருவில் புதிய வீடு கட்டி, மொழி இல்லம் என பெயரிட்டு, கிரகப்பிரவேச பூஜை செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
‛டிக் டாக்' மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிருணாளினியின் நீண்டநாள் கனவு இப்போது நிறைவேறி உள்ளது என அவர் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். சொந்தமாக ஒரு வீட்டை கட்டி, அதற்கு மொழி இல்லம் என பெயரிட்டு உள்ளார். வீட்டு கிரக பிரவேசம் மற்றும் குடும்பத்தினர் உடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‛‛என்னுடைய சிறு வயதில் என் அப்பா, அவரின் அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்டினார். அதேபோல் எனக்கும் எனது அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பது கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி உள்ளது. உங்கள் அனைவரது ஆசீர்வாதம் மற்றும் அன்பினால் தான் இது சாத்தியமானது. இதற்காக என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கட்டியுள்ள தனது இல்லத்திற்கு ‛மொழி இல்லம்' என தனது தாயின் பெயரையே வைத்திருக்கிறார் மிருணாளினி.