Soodhu Kavvum 2 : மொக்கை காமெடிகளின் அரசன் வருகிறார்...மிர்ச்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 ரிலீஸ் தேதி இதோ

மிர்ச்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாக. இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

Continues below advertisement

சூது கவ்வும் 2

நலன் குமாரசாமி இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம்  சூது  கவ்வும் . சஞ்சிதா ஷெட்டி,ரமேஷ் திலக்,அஷோக் செல்வன்,பாபி சிம்ஹா,கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியவர்கள் இப்படத்தில்  நடித்திருந்தார்கள். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதையமைப்பை கொண்ட இப்படம் நடிகர் விஜய் சேதுபதி கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சந்தோஷ் நாயாரணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

Continues below advertisement

முதல் பாகம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சூது கவ்வும் 2 படம் உருவாகியிருக்கிறது. சூது கவ்வும் : நாடும்  நாட்டு மக்களும்’ என இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர். சி.வி குமார் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில்  இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். ஹீரோவாக இப்படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார். மேலும் ரமேஷ்,திலக் கருணாகரன் , கவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு  கார்த்திக்.கே தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அதேசமயம் முந்தைய பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சூது கவ்வும் 2 ரிலீஸ் தேதி

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு ப்ரோமோ மூலம் அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோவில் மிர்ச்சி சிவா வைன் ஷாப் ஓனருக்கு ஃபோன் அடித்து வடிவேலு ஸ்டைலில் பிரபா வைன் ஷாப் ஓனரா என்று கேட்டு சரக்கு ஆர்டர் செய்கிறார். ஏன் எல்லாமே இரண்டு இரண்டாக ஆர்டர் செய்கிறார் என்று கவி கேட்க ஏனால் இது பார்ட் 2 என்று சிவா தனது ஸ்டைலில் மொக்கை காமெடி ஒன்றை அடிக்கிறார். வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சூது கவ்வும் 2 படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததைப் போலவே மிர்ச்சி சிவாவும் இப்படத்தில் தனது ஸ்டைலில் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கலாம் 

Continues below advertisement
Sponsored Links by Taboola