மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி எப்படி நாட்டை முழுவதுமாக கைப்பற்றியது என்பது எல்லோருக்கும் தெரியும், மார்வல் டிசி சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை மட்டுமே பார்த்து பிரமித்த நம்மூர் மக்களுக்கு மின்னல் முரளி மார்தட்டிக்கொள்ளும் அளவிலான பெருமிதமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் தற்போது மாணவர்களுக்கு அவர்களது தேர்வுகளுக்கிடையே சிறிது ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளது. 


கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள மார் அத்தனாசியஸ் பொறியியல் கல்லூரியில் (MACE) உதவிப் பேராசிரியர் ஒருவர்தான் இப்படியான வினாத்தாள் ஒன்றை மாணவர்களுக்காக வடிவமைத்துள்ளார். 


டாக்டர் குரியன் ஜான் என்ற இந்தப் பேராசிரியர், மின்னல் முரளியின் கதையை  ப்ளூயிட் மெக்கானிக்ஸ் பாடத்துடன் இணைத்து இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். 






வினாத்தாளில் சூப்பர் ஹீரோ முரளி, அவரது எதிரியான ஷிபு மற்றும் படத்தின் கதை நடக்கும் கிராமம் உள்ளிட்ட அனைத்தையும் மையமாக வைத்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் இதனைப் பகிர்ந்துள்ளார். 


கேள்வியில்,“இந்த வினாத்தாளில் சித்தரிக்கப்பட்டுள்ள கதை, பெயர்கள், கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையானவை. உண்மையான எதனுடன் இதனைத் தொடர்புபடுத்தக்கூடாது. வாழ்த்துகள்! தேர்வை சிறப்பாக எழுதுங்கள், பிறகு என்னை விமர்சிக்கலாம்!!!” என அந்தப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 


முழுக் கேள்வியும் மின்னல் முரளியைச் சுற்றியுள்ள சூழலை அடிப்படையாகக் கொண்டது, “மின்னல் முரளி இப்போது சர்வதேச சூப்பர் ஹீரோவாக இருப்பதால், அவர் அயர்ன்-மேனால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார், மேலும் அவரது வருகையின் போது, ​​அயர்ன்-மேன் மின்னல் முரளிக்கு புதிய-நியூட்டோனிய திரவங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால், அவர் ப்ளுயிட் மெக்கானிக்ஸ் பாடத்தைப் படிக்காததால், அதனைப் புரிந்துகொள்ள, S3Mன் சூப்பர் ஹீரோக்களைக் கலந்தாலோசித்தார். தயவுசெய்து அவருக்கு உதவுங்கள், ”என்று கேள்வி கேட்டுள்ளார். பேராசிரியரின் இந்த வினாத்தாள் ஸ்டண்ட் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.