மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்ட அவரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 






1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, எஸ்.பி.பாலசுப்பிரம்ணியம், ஜனகராஜ், அஜய் ரத்னம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “குணா”. சந்தான பாரதி இயக்கிய இந்த படத்தின் பெரும்பகுதி கொடைக்கானலில் உள்ள மலை குகை பள்ளத்தாக்கு ஒன்றில் படமாக்கப்பட்டது. அதுமுதல் கொடைக்கானலில் இந்த இடம் “குணா குகை” என்றே அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறது. இப்படியான இந்த குகையில் 2006 ஆம் ஆண்டு கொச்சி மஞ்சும்மலில் இருந்து கொடைக்கானல் குணா குகைக்கு சுற்றுலா சென்ற ஒரு நண்பர்கள் குழுவின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 






இதனிடையே மஞ்சுமெல் பாய்ஸ் படம் தொடர்ச்சியாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் தியேட்டர்கள் காட்சிகளின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பார்த்து பாராட்டி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்த்தேன். சூப்பராக உள்ளது. தவறாமல் படம் பாருங்கள். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார். 


இதனைப் பார்த்த இணையவாசிகள் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “நீங்கள் படங்கள் பாருங்கள் தவறில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் அரசை சுட்டிக்காட்டி பல பிரச்சனைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நேரத்தில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்காமல் படம் பார்த்து விமர்சனம் சொன்னால் சரியாகுமா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கும் படம் பார்த்து கருத்து சொல்ல உரிமையுள்ளது என ஆதரவு பதிவுகளையும் கூறி வருகின்றனர். 




மேலும் படிக்க: Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்!