தன் தந்தை போனி கபூர் - ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜான்வி கபூர் நடித்துள்ள மிலி படத்தில் ட்ரெய்லர் (Mili trailer) வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஹெலன். ஆனா பென் நடிப்பில் வெளியான இப்படத்தை மது குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.
த்ரில்லர் டிராமாவான இப்படம் சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த மேக் அப் என இரண்டு தேசிய விருதுகளை வென்றது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்தின் இந்தி பதிப்பில் தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்தப் படத்தையும் ஹெலன் படத்தை இயக்கிய மதுக்குட்டி சேவியரே இயக்குகிறார்.
ஆனா பென்னின் சிறப்பான நடிப்புக்கு ஜான்வி சோபிப்பாரா என முன்னதாக இப்படத்தின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், முன்னதாக வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று, ஜான்வியின் காட்சிகள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
மிலி’ திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக ஜான்வி கபூர் நடிப்பில் Good Luck Jerry திரைப்படம் (கோலமாவு கோகிலா ரீமேக்) டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி வெளியானது.