Continues below advertisement

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மைக்கேல்'. இப்படத்தின் டிரைலர் தற்போது மாஸாக வெளியாகியுள்ளது. மாநகரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுகளை குவித்த சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை தயாரிக்கிறார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்ரீனிவாஸ். 

 

Continues below advertisement

 

படக்குழுவினர் விவரம் : 

மைக்கேல் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக கெத்தாக நடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பிகில் ராயப்பன் கெட்டப்பில் தோன்றுகிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய திரைப்பமாக உருவாகியுள்ள இப்படத்தில் திவ்யன்ஷா கௌசிக்,  வரலக்ஷ்மி சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். ரிலீசுக்கு தயாராகி வரும் மைக்கேல் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர் ராக் ஸ்டார் அனிருத் மற்றும் நடிகர் ஜெயம் ரவி.

 

 

கம்ப்ளீட் என்டர்டெயினர் விஜய் சேதுபதி : 

விஜய் சேதுபதி ஒரு கம்ப்ளீட் என்டர்டெயினர் என்பதை அடுத்தடுத்து நிரூபித்து வருகிறார். ஹீரோவாக நடித்தாலும் சரி வில்லனாக நடித்தாலும் சரி அந்த படத்திற்கு தேவையான நடிப்பை கொஞ்சமும் குறைவின்றி கொடுப்பார் என்பதற்கு அடுத்த உதாரணமாக அமைந்துள்ளது இந்த மைக்கேல் திரைப்படம். ரத்தம் தெறிக்கும் இந்த ஆக்ஷன் படத்தின் டிரைலர் மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. இந்த ஆக்ஷன் படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

 

மைக்கேல் ரிலீஸ் : 

மைக்கேல் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது இந்த டிரைலர். மைக்கேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.