சமீப ஆண்டுகளாகவே உடல், சரும அழகை பராமரிப்பதற்காக பலரும் பல்வேறு வகையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை சாதாரண மக்களே செய்து கொள்கிறார்கள். எனில் செலிப்ரிட்டிகளின் கதைகளைக் கேட்கவே வேண்டாம். அப்படித்தான் செலிப்ரிட்டிகளிடம் பிரபலமாய் இருக்கிறது போட்டாக்ஸ் ட்ரீட்மென்ட்.
அதைதான் சமீபத்தில் முன்னாள் அடல்ட் பட நடிகை மியா கலீஃபா எடுத்துக் கொண்டுள்ளார். அக்குளில் அதிகமாக வியர்வை சுரப்பதால் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். `ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Hyperhidrosis) எனும் பிரச்சினையால் சமீப வருடங்களாகவே அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். வழக்கத்தை விட அதிகமாக வியர்வை சுரந்து பிரச்சினையை ஏற்படுவதைதான் மருத்துவ டெர்மில் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
அதிகப்படியான மன அழுத்ததின் காரணமாக கடைசி 5 வருடங்களாகவே இந்த பிரச்சினையால் பாதித்துள்ளதாக மியா கலீஃபா தெரிவித்துள்ளார். அதற்காக எவ்வளவு வாசனை திரவியங்களைப் பயன்படுத்தினாலும் பலனளிக்கவில்லை. அதிகப்படியாக வியர்க்கும் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட போட்டாக்ஸ் ஊசியை செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வியர்வை பிரச்சினையை ஓரளவு போட்டாக்ஸ் சிகிச்சை குறைத்துள்ளதாகவும் வருடத்திற்கு 2 அல்லது 3 முறை இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “இனி நான் சட்டை அணியும்போது எனக்கு வியர்க்காது, அதனால் நான் சாம்பல் சட்டை அணிய முடியும். குளிர்காலத்தில் வியர்வை கறையால் அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. அக்குளில் போட்டோக்ஸ் சிகிச்சை எடுத்த பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அடல்ட் படங்களில் பணிபுரிந்த பிறகு மியா பிரபலமடைந்தார், ஆனால் அவர் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்தத்துறையை விட்டு வெளியேறினார். அப்போது பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்தத் துறையில் பணிபுரிந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அது தன்னை பாதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.