நியூ யார்க் நகரில் நடைபெறும் மெட் காலா ஆடை அலங்கார நிகழ்ச்சியில் நடிகை காரா டெலிவிங்னே தனது மேலாடையை கழற்றி அரங்கத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


காரா டெலிவிங்னே டியோர் ஹாட் கோச்சர் என அழைக்கப்படும் ஒரு ஸ்பெஷல் உடை அணிந்து வந்து அரங்கை அசத்தினார். சிவப்பு நிற உடையான அதில் முன்னாள் மூன்று நாடாக்கள் கட்டப்பட்டு இருந்தது. அந்த உடையில் வந்திருந்த அவர் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை கையில் வைத்து வந்திருந்தார். ஏற்கனவே இந்த உடையை கண்டு களித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு திடீர் அதிர்ச்சியை கொடுத்தார். மேடையில் ஏறிய உடன் தனது மேலாடையை கழற்றினார். கழற்றியதும் அரங்கமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மினுமினுக்கும் தங்க பூச்சு பூசிய நிர்வாண உடலை காண்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒரு ஜோடி தங்க நிப்பிள் கவர்கள் கொண்டு மறைத்திருந்தார். உடல்மீது தங்க சங்கிலிகள் மூலம் அலங்கரித்திருந்தது, அவருடைய கிளாமர் லுக்குக்கு மேலும் அழகு சேர்த்தது.



காராவின் இந்த மேலாடை அற்ற தோற்றம் சமூக ஊடகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 'இதனை ஒரு ஆடை என்று நினைத்து உடுத்தி இருக்கிறார்', என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். 'கண்ணில் கண்ட துணியெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து உடை என்று நம்பி உடுத்தியுள்ளார்', என்று ஒருவர் கூறினார். 'இப்போதெல்லாம் இதைத்தான் ஃபேஷன் என்று கூறிக்கொண்டு பலர் திரிகிறார்கள், எதற்கும் பிரயோஜனம் இல்லை', என்று மற்றொருவர் கமெண்ட் செய்திருந்தார். சிலர் இவரது முயற்சிக்கு பாராட்டுகளும் தெரிவித்திருந்தனர். இது ஒரு புதுமையாக இருக்கிறது என்று ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.






இந்த ஆண்டு மெட் காலா விழாவில் மட்டுமல்ல, மெட் காலா 2021 இல் கூட காரா தனது மார்பில் "பெக் தி பேட்ரியார்க்கி" என்ற சொற்றொடருடன் கூடிய ஆடை அணிந்து சர்ச்சையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கண்கவர் உடையணிந்து பங்கேற்றனர். சூப்பர் மாடல் பெல்லா ஹடிட், கருப்பு நிறத்தில் கவர்ச்சிகர உடையணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நியூயார்க் நகர காவல் ஆணையர் லாரி கம்போ - பாபி டிஜி ஓலிசா ஜோடி மெட் காலா நிகழ்ச்சியிலேயே தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்திக் கொண்டனர். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலன் மஸ்க்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.