2023- 24ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 


தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் அட்டவணை இன்று வெளியாகி உள்ளது. அட்டவணையை சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வெளியிட்டார்.


தேதி வாரியாக அறிவிப்பு


இதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 26ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 28ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.



ஏப்ரல் 1ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி விருப்ப மொழி பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி அன்று கடைசியாக சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை கடந்த கல்வி ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


பிளஸ் 2 தேர்வு எப்போது?


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.


கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகள், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, பொதுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


முழுமையாக வாசிக்க: 12th Public Exam Time Table: மார்ச் 1 முதல் 22 வரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இவைதான்- அட்டவணையோடு! 


இதையும் வாசிக்கலாம்: 10th 11th 12th Public Exam Result Date: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?- தேதிகள் அறிவிப்பு