Amala Akkineni : பெண்களை விட ஆண்கள்தான் நல்லா சமைப்பாங்க.. அமலா இப்படியா சொன்னாங்க?
சைதன்யா அவரது தந்தை நாகர்ஜூனாவை போலவே மிகவும் நன்றாக சுவையாக சமைக்க கூடியவர். பெண்களை விட ஆண்களே நன்றாக சமைக்க கூடியவர்கள் என்பதை மிகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் அமலா அக்கினேனி.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கும் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான நாக சைதன்யாவிற்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமண நடைபெற்றது. இருவரும் மிகவும் ஆத்மார்த்தமான ஜோடிகளாக வலம் வந்தனர். இதற்கு இடையில் இருவரும் ஒரு மனதோடு புரிவதாக மீடியா முன்னர் தெரிவித்து விவாகரத்தும் பெற்றனர். நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் அவரவர்களின் திரை வாழ்வில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ளனர்.
Just In





சமையலில் ஆண்கள்தான் சிறந்தவர்கள்:
முன்பு ஒருமுறை நாக சைதன்யாவின் தாய் மற்றும் நடிகர் நாகர்ஜூனாவின் மனைவியுமான அமலா அக்கினேனி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார். சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சேர்ந்து வாழ்ந்தபோது சமந்தா சமைத்ததே இல்லையாம். அவருக்காக சைதன்யாதான் உணவுகளை மிகவும் ருசியாக சமைப்பாராம். சமந்தாவிற்கு சமைக்க தெரியாதாம். கொஞ்சம் கொஞ்சமாக சமைக்க கற்றுக்கொள்வதாக ஏற்கனவே கூறியிருந்தார். சைதன்யா அவரது தந்தை நாகர்ஜூனாவை போலவே மிகவும் நன்றாக சுவையாக சமைக்க கூடியவர். மேலும் அமலாவிற்கு கூட சரியாக சமைக்க வராதாம். பெரும்பாலும் நாகார்ஜூனா தான் சமைப்பாராம். அவரின் சமையலை ருசித்து சாப்பிடுவாராம் அமலா. ஒரு வீட்டில் ஒரு நல்ல சமையல் கலைஞர் இருக்கும்போது ஏன் அதற்கு ஒரு வேலை ஆட்களை வைக்க வேண்டும்? பெண்களை விட ஆண்களே நன்றாக சமைக்க கூடியவர்கள் என்பதை மிகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் அமலா அக்கினேனி.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி :
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியான திரைப்படம் "கணம்". இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்திருந்தார் அமலா அக்கினேனி. டைம் மெஷினை மையமாக வைத்து மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ஸ்வாரஸ்யமாக திரைப்படம். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.