மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா - கன்னட நடிகை மேக்னா ராஜ் நான்காம் ஆண்டு திருமண நாளை மே 2ம் தேதியன்று "MCForever" என்ற அழகான தலைப்புடன் த்ரோபேக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார் மேக்னா. பத்து ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த இந்த காதல் ஜோடி கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் எதிர்பாராத ஒரு சோகம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு சிரஞ்சீவி சார்ஜா ஜூன் 2020 ல் மாரடைப்பு காரணமாக காலமானார். அப்போது மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவரின் இழப்புக்கு பிறகு மிகவும் தைரியமாக தனது பர்சனல் மற்றும் கேரியரை சரியான முறையில் கையாண்டு வருகிறார். தனது கணவரின் நினைவுகளோடு அக்டோபர் 2022ல் மகனைப் பெற்றெடுத்தார். மகன் ரயானுக்கு தனது அப்பாவை பற்றிய கதைகளை சொல்லி நல்ல பழக்கங்களை கற்பித்து தனது மகனை ஒரு சிறந்த பையனாக உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பலருக்கும் ஒரு உதாரணமாக விளங்கும் மேக்னா ராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 



மேக்னா ராஜ் தனது மகன் ரயானுக்காக நேரம் செலவழிக்க தயங்குவதில்லை. மகனுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்து வருகிறார். மகன் தான் மேகனாவின் பலமாக இருந்து வருகிறார். அவர் பகிரும் அம்மா - மகன் வீடியோ ரசிகர்களின் மனதை நெருடுகிறது. 


மேக்னா ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் " எல்லோரும் சொல்வது போல் காலப்போக்கில் விஷயங்கள் சிறப்பாக மாறலாம்" என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் " நல்லதோ கெட்டதோ நம் தலையில் என்ன எழுத பட்டதோ அதன் படி தான் அனைத்துமே நடக்கும். குழந்தை பருவம் முதல் ஜூன் 7 வரையில் என் வாழ்க்கை எனது விருப்படியே அமைந்தது. ஆனால் இந்த பிரபஞ்சம் எனக்கு வேறு ஒரு விதியை எழுதியுள்ளது.


 



எல்லாமே அமைதியாக இருப்பது போலவும் சரியான திசையில் செல்வது போலவும் இருக்கும் போது திடீரென ஒரு நாள் எல்லாமே அடியோடு மாறி மீண்டும் காலப்போக்கில் அது வேற லெவலில் மாறலாம். குறிப்பாக குழந்தையை மிகவும் ஆவலுடன் வரவேற்க காத்திருக்கும் தருணத்தில் வாழ்க்கை மாறிப் போனால் என்னால் எப்படி வாழ முடியும். ஆனால் நிச்சயம் அது சரியாகிவிடும் எனது குழந்தைக்காக அது நிச்சயம் மாற வேண்டும் என மிகவும் போல்டாக கூறினார் மேக்னா ராஜ்.