ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை (மே 4) நடைபெறும் ஐபிஎல் 2023 இன் 47வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. கொல்கத்தா அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடனும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் முறையே 8 மற்றும் 9 வது இடத்தில் உள்ளனர். 

இந்த சீசனில் இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இதுவாகும். அவர்களின் முதல் போட்டியில், ஹாரி புரூக் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கும். 

KKR VS SRH நேருக்குநேர் இதுவரை: 

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணி இதுவரை 24 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. 

புள்ளிவிவரங்கள் ஹைதராபாத்  கொல்கத்தா
அதிகபட்ச ஸ்கோர்  228  205
குறைந்தபட்ச ஸ்கோர் 115 101
முதல் பேட்டிங் வெற்றி 5 7
2வது பேட்டிங் வெற்றி 4 8
அதிக ரன்கள் டேவிட் வார்னர் (619 ரன்கள்) நிதிஷ் ராணா (441 ரன்கள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் டேவிட் வார்னர் (126)  கௌதம் கம்பீர் (90*)
அதிக விக்கெட்கள் புவனேஷ்வர் குமார் (23) ஆண்ட்ரே ரசல் (16) 
சிறந்த பந்துவீச்சு  கரண் சர்மா (4/38) பிரசித் கிருஷ்ணா (4/30)

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:

வீரர்கள் போட்டிகள் ரன்கள் அதிகபட்ச ஸ்கோர்
டேவிட் வார்னர் (ஹைதராபாத்) 15 619 126
நிதிஷ் ராணா (கொல்கத்தா) 12 441 80
ராபின் உத்தப்பா (கொல்கத்தா) 14 426 68

அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள்:

பந்து வீச்சாளர் போட்டிகள் விக்கெட்டுகள் சிறந்த பந்துவீச்சு 
புவனேஷ்வர் குமார் (ஹைதராபாத்) 21 23 3/19
ஆண்ட்ரே ரஸ்ஸல் (கொல்கத்தா) 14 16 3/22
ரஷித் கான் (ஹைதராபாத்) 12 12 3/19

KKR VS SRH கணிக்கப்பட்ட அணி விவரங்கள்: 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH):

அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், அகேல் ஹொசைன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR):

என் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி