சிரஞ்சீவி


தெலுங்கு திரையுலகி மெகாஸ்டார் பட்டத்திற்கு சொந்தக்காரர் நடிகர் சிரஞ்சீவி. கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு , இந்தி ,  கன்னட ஆகிய மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து இன்று தனக்கேன ஒரு ரசிக சாம்ராஜியத்தையே உருவாக்கியவர் சிரஞ்சீவி. நந்தி , ரகுபதி வெங்கையா விருது , 7 பிலிம்ஃபேர் விருதுகள் , பத்மபூஷன் என பல விருதுகளை குவித்துள்ளார். அந்த வகையில் தற்போது சிரஞ்சீவிக்கு மற்றொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. 


கின்னல் உலக சாதனையாளர் விருது


தமிழில் எப்படி விஜயோ அதே போல் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி . அவரது நடனத்தை பார்க்க ஒரு தனி படையே உண்டு. சிரஞ்சீவியின் நடனத் திறமையை பாராட்டும் விதமாக அவருக்கு இன்று கின்னஸ் உலக சாதனையாளர்கள் விருது அளிக்கப்பட்டுள்ளது.  45 ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் 537 பாடல்களில் 24 ஆயிரம் நடன அசைவுகளை வெளிப்படுத்தியதற்காக சிரஞ்சீவியின் பெயர் கின்னஸ் உலக சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஹைதராபதில் நடைபெற்ற இந்த இந்த விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கலந்துகொண்டு சான்றிதழை வழங்கினார். 


நிகழ்ச்சியில் பேசிய ஆமீர் கான் ' உங்களைப்போலவே நானும் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகன். இந்த விழாவுக்கு அவர் என்னை வரச்சொல்லி கேட்டபோது நான் ஏன் சார் என்னிடம் கேட்கிறீர்கள் உத்தரவிடுங்கள் என்றேன். சிரஞ்சீவி ஆடிய எந்த பாடலை பார்த்தாலும் அவர் அதில் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கலாம். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப் என்றாலும் அதை அவர் இஸியாக ஆடியிருப்பார். அவர் ஆடுவதை பார்க்கத் தொடங்கினால் பின் அதில் இருந்து நம் பார்வையை நகர்த்த முடியாது. அது தான் அவரது தனித்துவம்" என்று கூறினார்.