டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பணமோசடி தொடர்பாக முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால்,  கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா:


இதையடுத்து ஆறு மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்த பிறகு, “இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்றும் மக்கள் தீர்ப்பளிக்கும் வரை நான் முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன் என தெரிவித்தார்.


இதையடுத்து, முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிசி நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அவர் பேசியதாவது “ ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை, முதலமைச்சர் பதவி மீது எல்லாம் எனக்கு ஆசை இல்லை. வருமான வரித்துறையில் பணியாற்றியிருக்கிறேன், நான் நினைத்திருந்தால் கோடிக் கணக்கில் சம்பாதித்திருப்பேன். பாரத மாதாவுக்காக, அரசியலை மாற்றுவதற்காக அரசியலுக்கு வந்தேன் என கூறினார்.


சொந்தமாக வீடு கிடையாது.?


விரைவில் தனது  முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி அனைத்து வசதிகளையும் விட்டுவிடுவேன். இல்லத்தை விட்டு வெளியே வரும்போது, ​​எனக்கு வாழ இடம் கூட இருக்காது. என் வீட்டிற்கு வாருங்கள், என் வீட்டில் இலவசமாக வாழுங்கள் என்று மக்களிடம் இருந்து எனக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன என தெரிவித்தார். 






இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். 


1.ED, CBI ஆகியவற்றின் மூலம் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுகளை உடைக்க பிரதமர் மோடி பயன்படுத்தும் விதம்? இது சரியா? இதுதான் தேசபக்தியா?


2.மோடி ஜி அனைத்து ஊழல்வாதிகளையும் கட்சியில் சேர்த்துக் கொண்டார்? ஊழல் தலைவர்களைக் கொண்ட பாஜகவைப் பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?


3.ஆர்எஸ்எஸ் வயிற்றில் இருந்து பிறந்தது பாஜக. இவை அனைத்தையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?


4.மக்களவைத் தேர்தலின் போது ஜேபி நட்டா”  பாஜக இப்போது ஆர்எஸ்எஸ் இல்லை என்றார். நான் பகவத் ஜியிடம் கேட்க விரும்புகிறேன், நட்டா பேசியபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?


5.லால் கிஷன் அத்வானி போன்ற மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து ஓய்வு பெற்ற பா.ஜ.க. ஆனால் இப்போது அமித்ஷா, இந்த விதி மோடி ஜிக்கு பொருந்தாது என்று கூறுகிறார். நீங்கள் இதற்கு உடன்படுகிறீர்களா? என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.