சமூக வலைத்தளங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். நெகட்டிவ் பப்ளிசிட்டி என்பார்களே அந்த வகையில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.சூர்யா , விஜய் என முன்னணி நட்சத்திரங்களை  வசை பாடி அவரது ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். பாலிவுட் நடிகைகள் எல்லோரும் மீரா மிதுனின் முகத்தை காப்பி செய்துதான் மேக்கப் போடுகிறார்கள் என இதுவரையில் யாருமே சொல்லிடாத , சொல்ல யோசிக்கும் குற்றச்சாட்டுகளை கூட தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் முன்வைத்தார். இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு...என கேட்டாலும் , மீரா மிதுனின் இவ்வகை அலிகேஷன்ஸை காணவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு .


இந்த நிலையில் மீரா மிதுன் கடந்த வருட இறுதியில் பட்டியலின மக்களை இழிவாக பேசி போலிஸில் சிக்கிக்கொண்டார். இதுதொடர்பாக விசிகவின் வன்னியரசு புகார் அளித்த நிலையில், அவர் மீது தடுப்புச் சட்டம் உள்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மீரா மிதுன் போலீசாருக்கு சவால் விட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் 14ஆம் தேதி கேரளாவில்  சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரின் நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்த போலீசார், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். அபிஷேக் ஜாமின் பெற்ற நிலையில் ,  இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.




சமீபத்தில்தான் மீரா மிதுன் சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஆண் நண்பரான அபிஷேக் குறித்து பகிரங்க தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது இதுவரையில் மீரா மிதுனின் காதலனாக அறியப்பட்ட டான்ஸரான அபிஷேக் , ஒரு போலிஸ் இன்ஃபார்மர் என்கிறார் மீரா.


அபிஷேக்கும் பட்டியல் இனத்தவர்தான் , ஆனால் நான் பேச நினைப்பதை அவரால் தடுக்க முடியாது. நான் சின்ன பொண்ணு எனக்கு பேசுவதற்கான பக்குவம் பத்தல என்னும் மீரா மிதுன் , அபிஷேக் எனக்கு உண்மையான மேனேஜராகவும் , அன்பான காதலனாகவும் இருந்திருந்தால் ஜெயிலில் இருந்து வந்ததும் நேரடியாக என்னை வந்து சந்திருப்பாரே...ஆனால் சந்திக்கவில்லை. என்னோட மேனேஜராக இருந்ததால், என்னுடைய பாஸ்வேர்ட் அனைத்தையும் கைப்பற்றி , அனைத்தையும் முடக்கிவிட்டார். இப்போதுதான் எனக்கு எல்லாமே பிளான் என தெரியவந்தது.இந்த உலகத்துல யார் நல்லவங்க..கெட்டவங்க என்றே தெரியவில்லை. என வருந்துகிறார் மீரா மிதுன். மேலும் நான் முழுமையாக அபிஷேக்கை காதலனாக ஏற்றுக்கொண்டதே இல்லை என்றும் கூறி ஷாக் கொடுத்திருக்கிறார்.