தொலைக்காட்சி சீரியல்கள் நம் மக்களின் அன்றாட  வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகவே மாறிவிட்டது எனலாம். தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர்கள் உள்ளனர். தற்ப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான  மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து தான் பார்க்க போகின்றோம். 


இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆட்டோவில் மீனாட்சி வீட்டுக்கு வந்து இறங்க, அங்கே வெற்றி வைத்தியருடன் நிற்கிறான். தன் அம்மா செய்தது தவறு என வருத்தப்படும் வெற்றி, இந்தப் பிரச்சினையை சீக்கிரமே சரி செய்வதாக மீனாட்சியிடம் சொல்கிறான்.


ரங்கநாயகி கோவிலில் திட்டியதை தெரிந்துகொள்ளும் சக்தி, வெற்றிக்கு போன் செய்கிறாள். ஆனால் அதை எடுக்கும் பூஜா அமைதியாக இருக்க, வெற்றி என நினைக்கும் சக்தி, இன்று வீட்டுக்கு வரப் போகிறேன் என்கிறாள். பூஜா போனை கட் செய்துவிடுகிறாள்.


உடனே ரங்கநாயகியிடம், இத்தனை திட்டி வெளிய அனுப்பியும் இன்னும் சக்தி வெற்றியை டார்ச்சர் பண்றா, உங்களை அவமானப்படுத்தவே அவ இன்னைக்கு வீட்டுக்கு வரப் போறா என்கிறாள். அவள் வந்தால் அவளை சும்மா விட மாட்டேன் என்கிறாள் ரங்கநாயகி. அப்பொழுது அங்கே சக்தி வந்து விடுகிறாள்.


இதையடுத்து ரங்கநாயகி சக்தி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தன் அம்மாவை திட்டியது தவறு என்று சக்தி ரங்கநாயகியிடம் வாக்குவாதம் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 






 


மேலும் படிக்க


Vichithra husband : விசித்திரா கொடுத்த ஷாக்... மூத்த மகன் எடுத்த அதிரடி முடிவு... மனவேதனையில் விசித்திரா கணவர்


Trisha Forgive Mansoor Ali Khan: தவறு செய்வது மனித இயல்பு ...மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா..எக்ஸ் தளத்தில் அவரே போட்ட ட்வீட் ...


"ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது" மாநில அரசுகளின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்