மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனாவின் நிச்சயத்தை நிறுத்த வெற்றியை வைத்து புஷ்பா பிளான் போடும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 


புஷ்பாவின் வீட்டிற்கு தாம்பாள தட்டுடன் வரும் மீனாட்சி தன் மூத்த மகள் யமுனாவின் நிச்சயதார்த்தத்திற்கு நீதிமணிக்கு மட்டும் அழைப்பு விடுத்த நிலையில் புஷ்பாவை கூப்பிடாமல் இருக்கிறார்.  இதனால் கடுப்பாகும் அவர் மீனாட்சி சென்ற பின்பு சங்கிலியுடன் கூட்டாக பேசி நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்கு யோசிக்கிறாள்.






அன்று இரவே சங்கிலி புஷ்பாவிற்கு ஃபோன் செய்து பச்சை குத்தும் பெண்ணை பிடித்து வைத்திருப்பதாக சொல்கிறார். அவளை அடித்து புஷ்பா விசாரிக்கிறார். இதில் நெஞ்சில் அம்மா என்று பச்சை குத்தி இருப்பது ரங்கநாயகியின் மகன் வெற்றி என்ற உண்மையை சொல்லி விடுகிறார். இதனையடுத்து ஊரில் இருப்பதாக சொன்ன சக்தியை ரோட்டில் பார்க்கும் வெற்றி அவளுக்கு போன் செய்கிறார். ஆனால் அவளோ  ஊரில் இருப்பதாக மீண்டும் பொய் சொல்லிவிட்டு  செல்கிறாள்.


வெற்றிக்கு போன் செய்யும் புஷ்பா சக்திக்கு நிச்சயதார்த்தம் நடப்பதாகவும் கட்டாயப்படுத்தி அவளை சம்மதிக்க வைத்திருப்பதாகவும் சொல்கிறாள். மறுபுறம் யமுனா மேக்கப் எல்லாம் போட்டு தயாராக கார்த்திக் குடும்பத்தினர் மீனாட்சி வீட்டிற்கு வந்து அமர்கின்றனர்.


இதனையடுத்து நீதிமணி, புஷ்பா என இருவரும் வந்து தாம்பாள தட்டை மாற்றுவதற்கு தயாராகின்றனர். அதிர்ச்சியடைந்து சக்தியின் வீட்டிற்கு வெற்றி போன் செய்ய துர்கா போனை எடுக்கிறார். அவர் அக்காவிற்கு நிச்சயதார்த்தம் என்று போனை கட் செய்து விடுகிறாள். இதனால் கோபத்துடன் வெற்றி சக்தியின் வீட்டிற்கு கிளம்புவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.