பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு  திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளதாக பொதுமக்களும், சினிமா விமர்சகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலானோர் கூட்டுக்குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில் வளர்ந்து வருகின்றனர்.




கூட்டுக்குடும்பமா, அப்படியென்றால் என்ன? என வியப்போடு கேள்விகளை கேட்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். 60 களில் கூட்டுக்குடும்பத்தில் தான் வாழ வேண்டும் எனவும் அங்குள்ள அனைவரையும் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும் என திருமணமான பெண்களுக்குச் சொல்லி அனுப்புவார்கள் அவர்களின் பெற்றோர்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. சிலர் குடும்பத்தோடு வாழ பிடிக்காமல் தனிக்குடும்பமாக வாழ்கிறார்கள். மற்றும் சிலரோ பணி நிமிர்த்தமாக பிரிந்து வாழ நேரிடுகிறது. இதன் காரணமாக தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அண்ணன், தம்பி என்ற உறவின் அருமைத் தெரியாமலே வளர்கிறார்கள் இன்றைய தலைமுறைகள்.


Malavika Mohanan: சிறிய வயது ஆணுடன் காதல் சரியா? - பச்சைக்கொடி காட்டிய மாளவிகா மோகனன்!




அவர்களுக்கு குடும்ப உறவுகளின் மேன்மையை தெரியவைக்கும் விதமாகவும், கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை விளக்கும் விதத்தில், மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும்  தனியார் பள்ளியான ஈரோகிட்ஸ் என்ற பள்ளியின் நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, இப்பள்ளியில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் 60 பேரையும், பள்ளியின் அருகில் செயல்படும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கி வசித்து வரும் 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகளுடன் அழைத்து வந்து வாரிசு திரைப்படத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 


CM MK Stalin: ’எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என தி.மு.க. அரசு செயல்படுகிறது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!




இதன்மூலம் குழந்தைகள் குடும்ப உறவுகளின் மாண்பினையும், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்வதோடு, தங்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூதாட்டிகளும் குழந்தைகளோடு இணைந்து வெளியில் வந்ததால் மகிழ்ச்சியில் திளைத்தனர்.  மேலும் இவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திரைப்படம் பார்ப்பதாகவும், குழந்தைகளுடன் படம் பார்த்து தங்கள் குடும்பத்துடன் இருந்த உணர்வை ஏற்படுத்தியது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.