தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தன் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் பிரபல சினிமாட்டோகிராஃபர் கே.யு. மோகனனின் மகள் ஆவார்.


மாளவிகா மோகனன்:


மலையாளத்தில் 'பட்டம் போலே' என்ற படத்தில் 2013ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனன், உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் இயக்குநர் மஜித் மஜிதி எடுத்த இந்தி படமான ’பெயாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.


தொடர்ந்து 2019ஆம் ஆண்டு தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ’பேட்ட’ படம் மூலம் அறிமுகமாகி விஜய்யுடன் ’மாஸ்டர்’, தனுஷுடன் ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி மாளவிகாவை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த பெருமை அவரது இன்ஸ்டா பக்கத்தையே சேரும்!


மீண்டும் மலையாளத்தில்:


கண்கவர் ஃபோட்டோஷூட்களையும் ரசனையான கவர்ச்சியையும் சேர்த்து மாளவிகா பகிர்ந்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தை நோக்கி நெட்டிசன்களை படையெடுக்க வைத்தன.


இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மாளவிகா மலையாளப் படமான ’க்ரிஸ்டி’ மூலம் மீண்டும் தன் தாய் வீடான மலையாள உலகில் காலடி எடுத்து வைக்கிறார்.


இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வயது வந்த சிறுவன் தன்னை விட வயதில் மூத்த பெண் உடன் காதலில் விழும் கதையாக இப்படம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், தன்னை விட 9 வயது சிறியவரான ’கும்பளங்கி நைட்ஸ்’ பட புகழ் மேத்யூ தாமஸ் உடன் இணைந்து நடித்துள்ளார் மாளவிகா.


 






இந்நிலையில் க்ரிஸ்டி படம் குறித்த கேள்வி பதில் நிகழ்வை ட்விட்டரில் ask malavika எனும் ஹாஷ்டாகில் நடத்தி நேற்று (ஜன.28) தன் ரசிகர்களுடன் மாளவிகா உரையாடல் நடத்தினார்.


லவ் இஸ் லவ்:


அப்போது, “வயதில் மூத்த பெண், சிறிய வயது ஆண் இடையேயான காதல் பற்றிய உங்கள் கருத்து என்ன? க்ரிஸ்டி படம் இதனை  அடிப்படையாகக் கொண்டது என நினைக்கிறேன்” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.


இதற்கு பதிலளித்த மாளவிகா “காதல் அந்தஸ்து, வயது, சமூக எல்லைகள் இவற்றையெல்லாம் பார்க்காது என நினைக்கிறேன். காதல் காதல் தான். லவ் இஸ் லவ் இல்லையா” எனக் கூறியுள்ளார் மாளவிகாவின் காதல் பற்றிய இந்த பதில் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.


 






க்ரிஸ்டி படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் எனக் கூறப்படும் நிலையில், மோனிகா பெலுச்சி நடிப்பில் வெளியான பிரபல திரைப்படமான மலெனா போல் இப்படம் தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.