பன்முக திறமைக்காரி :


கலை என்பது எல்லை கடந்தது. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை! அப்படி கலையின் மீது முழு ஈடுபாடு கொண்டவர்தான் மாயா எஸ் கிருஷ்ணன். இவரை ஒரு நடிகையாக பலருக்கு தெரிந்திருக்கும் . ஆனால் இவர் ஒரு பன்முக திறமைக்கொண்ட கெட்டிக்காரி. இவருக்கு நடிக்க மட்டுமல்ல நன்றாக பாடவும் தெரியும்.நின்ற இடத்தில் இருந்தே அந்தரத்தில் பல்டி அடிக்கும் , பறக்கும் ஜிம்னாஸ்டிக் கலைஞரும் கூட. அதோடு சிறப்பு என்னவென்றால் இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் . நமக்குதான் இவர் அதீத பரீட்சியம் ஆனவர் அல்ல.ஆனால் சினிமா கலைஞர்களுக்கு இவர் நன்கு பரீட்சியமானவர். கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் திரைக்கு பின்னால் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.  மதுரையை சேர்ந்த மாயா , பாடகி ஸ்வாகதாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.







நடிகையாக ..


2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் திரைப்படம்தான் இவரின் அறிமுக திரைப்படம் . அடுத்ததாக தொடரி , 2.0 உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அமேசன் பிரைம் நடத்திய ’எங்க சிரி பார்ப்போம் ‘ என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார். தற்போது துருவ நட்சத்திரம் , சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் மாயா எஸ் கிருஷ்ணன் , விக்ரம் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அந்த காதாபாத்திரம் இவரை தற்போது உலகறிய செய்திருக்கிறது. மாயாவின் குரலோடு அனிருத் ஒரு பின்னணி இசை கொடுத்திருந்தார் பாருங்கள் அதுதான் டாப் நாச்!






அந்த காதாபாத்திரத்தை ஏற்க காரணம் :


மாயா எஸ் கிருஷ்ணன் நல்ல திறமையான பெண் என்பதில் சந்தேகமே இல்லை. மிகப்பெரிய படம் அதில் சிறு கதாபாத்திரம் என்றால் நடிப்பின் மீது தாகம் கொண்ட எந்த கலைஞரும் சம்மதிக்கத்தானே செய்வார்கள். ஆனால் பாலியல் தொழிலாளி என்றதும் முதலில் தயங்கியிருக்கிறார் மாயா. இயக்குநர் குழு யோசித்து கூறும்படி கூறியிருக்கிறார்கள்.அதன் பிறகு சம்மதித்த மாயாவிடம் இயக்குநர் லோகேஷ் கதாபாத்திரம் குறித்து விளக்கியிருக்கிறார். அதனை தனது மொபைலில் ரெக்கார்ட் செய்த மாயா , மீண்டும் மீண்டும் கேட்டுதான் அந்த கதாபாத்திரத்திற்கு தயாராகியிருக்கிறார். க்யூட்டாகவும் இருக்க வேண்டும் , அதிகப்படியான டோஸ் கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தாராம் மாயா. இந்த ரோலுக்கு கிடைத்த வரவேற்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை மக்கள் அவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் , நிறைய நல்ல மீம்ஸ்களை பார்க்க முடிகிறது என்கிறார் மாயா.