நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் அந்தகன். அந்ததுன் ஹிந்தியில் வெளியாகி மிக பெரிய வெற்றிபெற்றது, ஆயுஷ்மான் குர்ரானா படத்தின் நாயகனாக நடித்த அத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர், நடிகர் பிரஷாந்த் ஆயுஷ்மான் குர்ரானா ரோலில் நடிக்கிறார்.
இப்படத்தை பற்றிய அதிக அப்டேட் நாளுக்குநாள் வந்துகொண்டே இருக்கிறது. இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, லீலா சாம்சன் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். படத்தின் புதிய நடிகராக மாஸ்டர் படத்தில் நடித்த பூவையார் இணைந்துள்ளார். இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர் .