’சந்தும் பொந்தும் சரவெடி’ - மாஸ்டர் ஆல்பம் செய்திருக்கும் புதிய ஸ்ட்ரீமிங் சாதனை..

வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியன் வியூஸ்களைத்தாண்டி பெரும் சாதனை படைத்ததையடுத்து மாஸ்டர் படத்தின் ஆல்பம் 1 பில்லியன் ஸ்ட்ரீம்ஸை எட்டியுள்ளது.

Continues below advertisement

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையன்று ரிலீஸானது மாஸ்டர். கொரோனா பரவல் பயத்துக்கு மத்தியிலும் படம் வெளியாகி 50-ஆம் நாள் கொண்டாட்டம் வரை சக்கைபோடு போட்டது. திரைப்படத்துக்கு முன்பாகவே பாடல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டப்பட்ட வாத்தி கம்மிங்தான் இப்போதும் பலருக்கு ரிங்டோன்.

அனிருத் இசையில் படத்தின் ஒரு பாடல் விடாமல் அனைத்து பாடல்களுமே வைரல் ஹிட். கடந்த இரண்டு மாதங்களாக பலரின் ரிங்டோனாக இருக்கிற பாடலும் இதுவே . வாத்தி கம்மிங் பாடல் இணையத்தில் 100 மில்லியன் வியூஸ்களைத்தாண்டியும் பெரும் சாதனை படைத்துள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த சாதனையை ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.

#1BillionStreamsForMaster 🔥🔥🔥#HappyTamilNewYear and love you all 🙏🏻🙏🏻🙏🏻

Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @VijaySethuOffl @Jagadishbliss @7screenstudio @XBEntertaiment @SonyMusicSouth pic.twitter.com/TNeova62vJ
— Anirudh Ravichander (@anirudhofficial) April 14, 2021

இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் ஆல்பம் 1 பில்லியன் ஸ்ட்ரீம்ஸை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த மகிழ்ச்சையை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் " தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் என் அன்பும் பாராட்டும்” என்று  பகிர்ந்துள்ளார் .

Continues below advertisement
Sponsored Links by Taboola