வாரிசு படத்தின் ரிலீஸ் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அதிகார பூர்வ தகவல் வந்தவுடன் இந்த பொங்கல் வாரிசு பொங்கல் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வாரிசு படிப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய கூட்டம் குவிந்து தளபதி தளபதி என்று ஆராவாரத்துடன் கூச்சலிட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்த வீடியோவில் நடிகர் விஜய் பார்க்க செம ஸ்மார்டாகவும் இளமையாகவும் காட்சியளிக்கின்றார். ஆர்வத்துடன் வந்த ரசிகர்களுக்கு தன் கையை அசைத்து ஹாய் சொன்னார். இப்போது சென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடையும் என்பது எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் இடையில், நடிகர் அஜித்தின் துணிவு பட பர்ஸ்ட் லுக் வெளியானதையொட்டி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து சண்டை போட்டுக்கொண்டனர். அதில், எங்களுக்கு எதிரியாக நினைக்காத..எங்களுக்கு துணிவு ஜாஸ்தி...மீறி நினைச்சா உங்க ‘வாரிசு’ - வையே அழிச்சிடுவோம் என தெரிவிக்கப்பட்டு விஜய் ரசிகர்களை வாண்டட் ஆக வம்பிழுத்தனர். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒட்டப்பட்டதாக சொல்லப்படும் விஜய் ரசிகர்களின் போஸ்டரில் துணிவாக இருந்தாலும் சரி...யாராக இருந்தாலும் சரி..ஃபர்ஸ்ட் தளபதி எண்ட்ரி தான் என எழுதப்பட்டிருந்தது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய்யின் 66வது படமாக உருவாகி படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் படிக்க : ‛நான் வரும் காட்சிகள் சொற்பமே...’ குதிரை சவாரி போட்டோ வெளியிட்டு அறிவித்த பார்த்திபன்!
ஓடிடி.,யில் வெளியாகிறதா விடுதலை? பிரபல நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு பதிவு!