எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை தழுவி, விடுதலை என்கிற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. கதையின் நாயகனாக காமெடி நடிகர் சூரியும், கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.
அத்தோடு அந்த நிகழ்வை தன் சக கலைஞர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் இயக்குனர் வெற்றிமாறன். காமெடி நடிகர் சூரி, கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் என்பதாலும், வெற்றிமாறனின் இயக்கம் என்பதால், படம் தொடர்பான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் தான் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றது.
விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் விடுதலை படத்தில், சூரி காவலராக நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்களே பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்பார்ப்புக்கும் அதற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ளது. இந்நிலையில், ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம், நேற்று இரவு 12 மணியளவில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், வெற்றிமாறனின் மிகப்பெரிய அப்டேட் இன்று வரவிருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது ஆஹா நிறுவனம். வெற்றிமாறன், இரு படங்களை தற்போது கையாண்டு வருகிறார். ஒன்று, சூரி நடிக்கும் விடுதலை. மற்றொன்று சூர்யா நடிக்கும் வாடிவாசல். வாடிவாசல் இன்னும் தொடங்கவே இல்லை. விடுதலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அப்படி இருக்கும் போது, அது விடுதலை பற்றிய அப்டேட்டாக தான் இருக்க கூடும்.
ஓடிடி தளம் அதை அறிவித்திருப்பதை வைத்து பார்க்கும் போது, அது கட்டாயம் ஓடிடி வெளியீடு தொடர்பானதாக தான் இருக்க வேண்டும். படத்திற்கான வினியோக தியேட்டர் வினியோக உரிமையை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்ற நிலையில், எதற்காக ஆஹா இந்த மாதிரி அப்டேட் கொடுத்தது என தெரியவில்லை. சமீபத்தில், தியேட்டருக்கு பொருத்தமான படங்களை தியேட்டரிலும், ஓடிடிக்கு பொருத்தமான படங்களை ஓடிடியிலும் வெளியிடுங்கள் என பலரும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலை படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு பதில், ஓடிடி.,யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்குமோ எனத் தோன்றுகிறது. அதே நேரத்தில், வினியோக உரிமையை பெற்ற உதயநிதிக்கு, படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவிக்கு வழங்கி சரிகட்டலாம் என்று யோசித்திருக்கலாம். இது எல்லாமே யூகம் தான், ஆனால், ஏதோ ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகப் போவது மட்டும் உண்மை.