'The God of mischief' லோகி வெப் தொடரின் சீசன் 2-ன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 


மார்வெல் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பைப்போன்றே அதன் வெப் தொடர்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில்  ‘வாண்டா-விஷன்’, ‘லோகி’, ‘மூன் நைட்’, ‘மிஸ் மார்வெல்’, ‘சீக்ரெட் இன்வேசன்’, ‘ஏஜெண்ட் ஆஃப் ஷீல்ட்’ ஆகிய வெப் தொடர்கள் மிகவும் பிரபலம்.


இப்போது ஓராண்டாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த லோகி சீசன் 2 வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் லோகி டைம் ஸ்லிப்பிங் (Time Slipping) பிரச்சனையில் மாட்டி கொள்கிறார். நிகழ் காலத்துக்கும் கடந்த காலத்திற்கும் இடையே ஓடுகிறார். TVA-வில் இந்த சிக்கல் எப்படி சரிசெய்யப்படுகிறது, அதற்காக லோகி என்ன செய்கிறார் என்பதை நோக்கி நகர்கிறது காட்சி. அதோடு, இதிலிருந்து விடுபட லோகியால் முடியும் என ஒருவர் ஊக்கப்படுத்துகிறார். ‘You are God of Mischief' என்று அவர் கூறுகிறார். அதற்கு லோகி ‘I always been..' I will always be' என்று சொல்வதோடு ட்ரெய்லர் முடிகிறது.


ட்ரெய்லரை காண..



லோகி சீசன் -2 ரிலீஸ் தேதி


லோகி சீசன் -2 ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் அக்டோபர் 6-ம் தேதி டிஸ்னி -ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்த நிலையில் இந்த சீசன் சில காரணங்கலால் தள்ளிப்போனது. 


லோகி முதல் சீசனில் டெசராக்ட் பயன்படுத்தி டைன் ட்ராவல் செய்யும் லோகி தவறாக சிலவற்றை செய்ததால் என்ன குளறுபடிகள் நடக்கும் என்பதையும் லோகி மரணத்தில் இருந்து தப்பிப்பது போல இருக்கும்.  இதில் தானோஸிற்கு அடுத்து மாவெல் யுனிவர்ஸில் பெரிய வில்லனான ‘காங்’ என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பார். மோபியஸை லோகி சந்திக்கிறார். அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை குறித்து மோபியஸிற்கு தெரிவது போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 


எரிக் மார்டின், ஜஸ்டின் பென்சன், ஆரோன் மூர்ஹெட் ஆகியோர் இயக்கத்தில், மைக்கேல் வால்ட்ரான் எழுதியிருக்கும் இந்தத் தொடரில் லோகியாக டாம் ஹிடில்ஸ்டன் நடிக்க, மோபியஸ் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஓவன் வில்சன் நடிக்கிறார்.


இதெல்லாம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் போது நிகழ்ந்தது. லோகி டெசராக்ட்டை திருடி சென்றுவிடுவார். அது மல்டியுனிவர்ஸை உருவாக்கிவிடும். இதற்கு காரணமாக லோகியை காலம் தொடர்பானவற்றை நிர்வகிக்கும் ‘Time Variance Authority’ என்ப்படும் TAV-விடம் குற்றவாளியாகி விடுவார் லோகி. அப்போது லோகி என்னெவெல்லாம் செய்கிறார் என்பதை சொல்லும் முதல் சீசன். 


குறும்புகளின் கடவுளான லோகி  மீது யாருக்கும் நம்பிக்கை இருக்காது.அப்படியிருக்கையில் தன்னை நம்பும் நண்பனோடு சேர்ந்து இந்த 2-வது சீசனில் என்ன செய்ய இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.